பீ ஜீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீ ஜீஸ்
Bee Gees 1977.JPG
1977ல்: (மேலிருந்து கீழ்) பேரி கிப், ராபின் கிப், மாரிஸ் கிப்
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்BGs
இசை வடிவங்கள்
  • பாப் இசை
  • சோல் இசை
  • டிஸ்கோ
  • ராக் இசை [1]
இசைத்துறையில்
  • 1958–2003
  • 2006
  • 2009–2012
இணையதளம்beegees.com

பீ ஜீஸ் [Bee Gees] 1959ல் பேரி, ராபின், மாரிஸ் ஆகிய கிப் சகோதரர்களால் உருவாக்கப்பட்ட ஓர் இசைக்குழு. 1960களில் தொடங்கி ஐந்து பத்தாண்டுகளாக பல இசைத்தொகுப்புகளையும் தனியிசைகளையும் வெளியிட்டு 120 மில்லியன் இசைத்தட்டுகளுக்கும் மேலாக[2] விற்று சாதனை புரிந்துள்ள இக்குழு பல இசை விருதுகளை வென்றுள்ளது; குறிப்பாக, ஐந்து கிராமி விருதுகளையும்[3] 1997ல் ராக் அண்டு ரோல் ஹால் ஆவ் ஃபேமில் இக்குழுவின் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது[4].

தொடக்க காலம்[தொகு]

இக்குழுவின் பெயரை இடுவதற்கு ஒரு ஆஸ்திரேலிய இசைநிகழ்ச்சி நடத்துநர் காரணமாக இருந்தார். தொடக்க காலங்களில் இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் செயலை கிப் சகோதரர்களின் தந்தையார் ஹியூ கிப் செய்தார்[5]. சில ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் இருந்த இக்குழு, 1967ல் இங்கிலாந்து சென்றது. அங்கு ராபர்ட் ஸ்டிக்வுட்[6] என்ற இசைத் தயாரிப்பாளர் இக்குழுவை முன்னிறுத்தி, பல வெற்றி இசைத் தொகுப்புகளை வெளியிட உறுதுணையாக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Soft Rock Music Artists".
  2. "Barry Gibb honors brothers ...".
  3. "grammy.com -- Bee Gees".
  4. "rockhall.com -- Bee Gees".
  5. "The Very Very Beginning of the Bee Gees". மூல முகவரியிலிருந்து 2021-07-14 அன்று பரணிடப்பட்டது.
  6. "Rollingstone".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீ_ஜீஸ்&oldid=3268984" இருந்து மீள்விக்கப்பட்டது