உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்ரைஸ்ஸின் ஆடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூலாசிரியர்பேஜ் மேக்ப்ரியர்
பட வரைஞர்லோரி லோஹ்ஸ்டீட்டர்
மொழிஆங்கிலம்
வெளியீட்டாளர்அலாதீன் பேப்பர்பாக்ஸ்
வெளியிடப்பட்ட நாள்
2001
பக்கங்கள்40
ISBN978-0-689-82460-9

பீட்ரைஸ்ஸின் ஆடு  என்பது  2001 இல் வெளிவந்த புத்தகம். இது குழந்தைகளுக்கான கதை வடிவில் அமைந்துள்ள  புத்தகமாகும். இக்கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.  பீட்ரைஸ் ப்பீரா என்ற சிறுமி உகாண்டாவில் வாழும் ஒரு ஏழை குடும்பத்தை சார்ந்தவள். ஹைபர் சர்வதேச அமைப்பின் மூலம் அவளுக்கு பரிசாக கிடைத்த ஆட்டை கொண்டு அவளது வாழ்க்கை தரம் மாறியதே இக்கதையின் மையமமாகும். இப்புத்தகம் படம் பார்த்து கதைசொல்லும் அமைப்பில் அமைந்துள்ளது, இந்த படப் புத்தகத்தை எழுதியவர் பேஜ் மேக்ப்ரியர்  மற்றும் மூலத்தை விளக்கியவர் லோரி லோஹ்ஸ்டீட்டர் ஆவர். இக்கதை பீட்ரைஸ் ப்பீரா ஆட்டை கொண்டு எவ்வாறு தனது பள்ளிக்கு செல்லும் கனவை நினைவாக்குகிறாள் என்பதே ஆகும்.

இதற்கு பின்னுரையை, இலரி கிளின்டன் பின்வருமாறு எழுதுகிறார், "பீட்ரைஸ்ஸின்  ஆடு ஒரு இதயத்திற்கு இதமளிக்கும் ஒரு  நினைவூட்டல் கதை, மாற்றங்கள் எல்லா குடும்பங்களிலும் ஏற்படக்கூடியவை என்பதை நிரூபித்துள்ளது." புத்தக விற்பனையில் ஒரு பகுதி ஹைபர் சர்வதேச அமைப்பிற்கு கொடுக்கப்பட்டது

இப்புத்தகம்  கிறிஸ்டோபர் விருது மற்றும் தெனெஸ்ஸேஸ் தன்னார்வ மாநில புத்தக விருது மாஸ்டர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

இந்த உண்மைச் சம்பவம் 2005 இல் 60 மினிட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் கருத்துப்பொருளாக வெளியிடப்ப்டது.[1]

பீட்ரைஸ் ப்பீரா 2008இல்  கன்னேச்டிகிட் கல்லூரியில்  பட்டம் பெற்றார்  .[2]

குறிப்புகள்[தொகு]

  1. Leung, Rebecca (February 11, 2009). "Beatrice's Goat Fed A Dream: Bob Simon Reports On A Girl From Uganda Who Made It To A Prep School In America". 60 Minutes. CBS News. Archived from the original on 15 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 April 2013.
  2. Kristof, Nicholas D. (July 3, 2008). "The Luckiest Girl". NY Times. பார்க்கப்பட்ட நாள் 2 April 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்ரைஸ்ஸின்_ஆடு&oldid=3563861" இலிருந்து மீள்விக்கப்பட்டது