பீட்டா ஐதராக்சி அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-ஐதராக்சிபுரோப்பியானிக் அமிலம், ஓர் எளிய பீட்டா ஐதராக்சி அமிலம்

பீட்டா ஐதராக்சி அமிலம் (Beta hydroxy acid) என்பது கார்பாக்சி அமிலம் மற்றும் ஐதராக்சி வேதி வினைக்குழு என இரண்டு வேதிவினைக் குழுக்களையும் பெற்று அவை இரண்டு கார்பன் அணுக்களால் பிரிக்கப்பட்டிருக்கும் கரிமச் சேர்மமாகும். β- ஐதராக்சி அமிலம் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். ஆல்பா ஐதராக்சி அமிலங்களுடன் இவை நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளன. ஆல்பா ஐதராக்சி அமிலங்களில் இவ்விரண்டு வேதி வினைக்குழுக்களும் ஒரு கார்பன் அணுவால் பிரிக்கப்பட்டிருக்கும். பீட்டா ஐதராக்சி அமிலம் ஒப்பனைப் பொருள்களில் குறிப்பாக சாலிசிலிக் அமிலம் என குறிப்பிடப்படுகிறது. வயது முதிர்ச்சியை தடுக்கும் களிம்பு மற்றும் முகப்பருவுக்கான சிகிச்சைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

நீர் நீக்க வினையின்போது பீட்டா ஐதராக்சி அமிலங்கள் நிறைவுறாத ஆல்பா-பீட்டா அமிலங்களைக் கொடுக்கின்றன. ஐதராக்சிலேற்றமற்ற கார்பாக்சிலிக் அமிலங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வகை பீட்டா ஐதராக்சி அமிலங்கள் வலிமையானவையாகக் கருதப்படுகின்றன. ஆனால் ஆல்பா ஐதராக்சி அமிலங்களைக்காட்டிலும் அவை வலிமை குறைந்தவையாகும். ஏனெனில் மூலக்கூறுகளுக்கிடையிலுள்ள அதிக இடைவெளியினால் மூலக்கூற்றிடை ஐதரசன் பாலம் ஆல்பா ஐதராக்சி அமிலங்களைவிட எளிமையாக உருவாகிவிடுகிறது. கீழ்கண்ட அட்டவணை புரோப்பியானிக் வரிசைகளின் சில மதிப்புகளைக் காட்டுகிறது.

அமிலப் பண்புகள்[தொகு]

பெயர் pKa
புரோப்பியானிக் அமிலம் 4.87[1]
ஆல்பா ஐதராக்சி புரோப்பியானிக் அமிலம்
3.86[2]
β-ஐதராக்சி புரோப்பியானிக் அமிலம் 4.51

பிற பீட்டா ஐதராக்சி அமிலங்கள்:

  • β-ஐதராக்சிபியூட்டைரிக் அமிலம்
  • β-ஐதராக்சி β-மெத்தில்பியூட்டைரிக் அமிலம்
  • கார்னிட்டைன்
  • சாலிசிலிக் அமிலம், ஒரு β-ஐதராக்சி அமிலமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. கையேடு வேதியியல் மற்றும் இயற்பியல், CRC பிரஸ், 58 வது பதிப்பு பக்கம் D150-151 (1977)
  2. டாஸன், R. M. C. எட்., தரவு உயிர்வேதியியல் ஆராய்ச்சி, ஆக்ஸ்போர்டு, Clarendon Press, 1959.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டா_ஐதராக்சி_அமிலம்&oldid=2686499" இலிருந்து மீள்விக்கப்பட்டது