பி. வி. இந்திரேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. வி. இந்திரேசன் என்பவர் (Pavaguda V. Indiresan 1928-2012) இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர் கல்வியாளர் மற்றும் நிருவாகி. சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தின் இயக்குநராக இருந்தார். தில்லியில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக் கழகத்திலும் பேராசிரியராக இருந்தார்.[1]

மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியாளர்கள் நிறுவனத்தின் தலைவராகவும் இந்தியத் தேசிய பொறியியல் அகாதமியின் தலைவராகவும் இருந்தார்.[2]

இந்திய அறிவியல் நிறுவனத்தில் பட்டம் பெற்ற இந்திரேசன் பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார். படிப்பு முடிந்து ரூர்கி பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார்.

இந்திய நகரங்களில் நிலவி வரும் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு இந்நகரங்களில் உள்ள வசதி வாய்ப்புகளை சிற்றூர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் நோக்கத்துடன் புரா என்கிற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கினார்.

கல்வி சமூகம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகள் சார்ந்த கட்டுரைகளை சில ஆங்கில இதழ்களில் எழுதி வந்தார்.

பெற்ற விருதுகள்[தொகு]

  • பத்ம பூசண் விருது
  • அமெரிக்க மற்றும் மின்னணு மற்றும் மின்சாரப் பொறியாளர்கள் நிறுவனம் வழங்கிய மதிப்புறு உறுப்பினர் விருது.
  • கருநாடக தொழில் நுட்ப பல்கலைக்கழக மதிப்புறு முனைவர் பட்டம்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._இந்திரேசன்&oldid=2212203" இலிருந்து மீள்விக்கப்பட்டது