உள்ளடக்கத்துக்குச் செல்

ப. விக்னேசுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி. விக்னேஸ்வரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விக்னேஸ்வரன் பரமநாதன்
பிறப்புகாங்கேசன்துறை, இலங்கை
பணிதொலைக்காட்சி வானொலி கலைஞர்
வலைத்தளம்
http://wigneswaran.blogspot.com

விக்னேஸ்வரன் பரமநாதன் யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆரம்பத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக 1970 ஆம் ஆண்டில் இணைந்து கொண்ட இவர், பின்னர் தமிழ்ச்சேவையில் நாடகப்பகுதியின் தயாரிப்பாளராக 1979 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். இவர் காலத்தில் வானொலி தமிழ் நாடகத்துறை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ரூபவாகினி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அங்கும் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட(1982) இவர், ஞானம் இரத்தினம் ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்ப் பிரிவுக்கு பொறுப்பாளராக 1984 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். தற்போது கனடாவில் வசிக்கும் இவர் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுவதோடு, கனேடிய தொலைக்காட்சி நிறுவனமான TVI யில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகவும், TVI தொலைக்காட்சியிலும், CMR வானொலியிலும் செய்தி வாசிப்பவராகவும் செயற்படுகின்றார்.

வானொலியில்

[தொகு]

இலங்கையில்

[தொகு]

இலங்கை வானொலியில் தமிழ் நாடகத் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் பல வானொலி நாடகங்களை எழுதியுமிருக்கிறார். 'ரசமஞ்சரி' போன்ற சஞ்சிகை நிகழ்ச்சிகளை தயாரித்தவர்.

கனடாவில்

[தொகு]

இவர் எழுதிய "வாழ்ந்து பார்க்கலாம்" என்ற வானொலித் தொடர்நாடகம், கனடா தமிழோசை வானொலியிலும் (1995), கனேடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் இது நூல்வடிவிலும் வெளிவந்தது.

தொலைக்காட்சியில்

[தொகு]

ரூபவாகினியில்

[தொகு]

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றியதோடு, பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதி, தயாரித்து வழங்கியிருக்கிறார். ரூபவாகினியில் முதன்முதலாக தயரிக்கப்பட்ட தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையை இவர் தயாரித்த ஜெயமோகன் எழுதிய "கற்பனைகள் கலைவதில்லை" பெற்றது.

  • கற்பனைகள் கலைவதில்லை
  • கண்ணாடி வார்ப்புகள்( மேடை நாடகவடிவில் படமாக்கப்பட்டது)
  • நிஜங்களின் தரிசனம் ( இவரே எழுதியது)
  • உதயத்தில் அஸ்தமனம் ( யாழ்ப்பாண்த்தில் படமாக்கப்பட்டது)
  • நீண்ட கனவு ( இவரே எழுதியது)
  • மலையோரம் வீசும் காற்று ( மலையகத்தில் படமாக்கப்பட்டது)
  • சமூக சேவகி
  • காத்திருந்தவன்
  • நம்பிக்கை

கனடா ரி.வி.ஐ தொலைக்காட்சியில்

[தொகு]

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிவதோடு, பல நிகழ்ச்சிகளையும், நாடகங்களையும் தயாரித்து வழங்கி வருகிறார்.

  • நாற்சார வீடு

மேடை நாடகங்கள்

[தொகு]

கனடாவில் மனவெளியின் அரங்காடல் நாடக விழாவிற்காக பல நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றியிருக்கிறார்.

  • நா. சுந்தரலிங்கத்தின் 'அபசுரம்'
  • பி. விக்னேஸ்வரனின் 'இனி ஒரு எதிர்காலம்' (2001)
  • இயூஜின் அயனஸ்கோவின் 'நாற்காலிகள்'

திரைப்படத் துறையில்

[தொகு]

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் நடத்திய திரைப்படப்பிரதிக்கான போட்டியில் இவர் எழுதிய ' கிராமத்து இதயம்' என்ற பிரதி சிறந்த தமிழ்ப் பிரதிக்கான விருதைப் பெற்றது.

எழுதிய நூல்கள்

[தொகு]
  • 'வாழ்ந்து பார்க்கலாம்' (வானொலி நாடகம்)

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._விக்னேசுவரன்&oldid=4124910" இலிருந்து மீள்விக்கப்பட்டது