உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிப் ஈட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப் ஈட்டன்

பிலிப் ஈ. ஈட்டன் (Philip E. Eaton) (பிறப்பு:1936) என்பவர் அமெரிக்காவிலுள்ள சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரும் இவருடன் ஆய்வில் ஈடுபட்ட சக ஆராய்ச்சியாளர்களும் 1964 ஆம் ஆண்டு கியூபேன் (C8H8) என்ற செயற்கை ஐதரோகார்பன் மூலக்கூறை முதன்முதலில் தயாரித்தனர்[1][2].

மாவோ-சி சாங்குடன் பணிபுரிந்த இவர் ஆக்டாநைட்ரோகியூபேன் தயாரித்த முதல் நபராகக் கருதப்படுகிறார். (இவர்களின் ஆய்வறிக்கை 2003 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது). எட்டு நைட்ரோ குழுக்களும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் கார்பன் - கார்பன் பிணைப்புகளும் இருப்பதன் காரணமாக ஆக்டாநைட்ரோகியூபேன் மிகவும் சக்திவாய்ந்த ஓர் உயர் வெடிபொருளாக உள்ளது.

தொடக்க காலம்

[தொகு]

பிலிப் ஈ. ஈட்டன் 1936 ஆம் ஆண்டு நியூயார்க்கின் புரூக்ளின் நகரில் பிறந்தார். ஈட்டனுக்கு ஏழு வயதாக இருந்தபோது, அவரது குடும்பம் நியூ செர்சியிலுள்ள புத் ஏரிக்கு இடம் பெயர்ந்தது. இங்கேதான் இவர் ராக்சுபரி இலக்கணப் பள்ளியிலும் பின்னர் ராக்சுபரி உயர்நிலைப் பள்ளியிலும் சேர்ந்து படித்தார். இந்த உயர்நிலைப் பள்ளி கல்வி ஆண்டுகளில்தான் ஈட்டன் அறிவியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். இவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஆதரவே அவரை வேதியியலில் முதலிடம் பெற காரணமாக அமைந்தது.

உயர் கல்வி

[தொகு]

ஈட்டன் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் வேதியியலை முதன்மைப் பாடமாக தேர்ந்தெடுத்தார். 1957 ஆம் ஆண்டில் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்பு இளங்கலை பட்டம் பெற்றார். 1960 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டமும் 1961 ஆம் ஆண்டு முனைவர் பட்டமும் பெற்றார். 1961 ஆம் ஆண்டில். பள்ளியில் படித்த காலத்தில் இவர் கூடு வேதியியலை குறிப்பாக கீப்போன்கள் தொடர்பான வேதியியலை நன்கு அறிந்திருந்தார்.

கற்பித்தல் அனுபவம்

[தொகு]

ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவுடன் ஈட்டன் பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்த நேரத்தில் அவர் அறிமுக கரிம வேதியியல் பாடத்தை கற்பித்தார். 1962 ஆம் ஆண்டு ஈட்டன் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார் [3][4].

ஆராய்ச்சி

[தொகு]

சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு வந்தபின் ஈட்டன் தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார், இக்காலத்தில்தான் இவர் கியூபேன் தொகுப்புக்காக மிகவும் பிரபலமானவர். 1964 ஆம் ஆண்டில் ஈட்டன் மற்றும் தாமசு டபிள்யூ. கோல் சூனியர் இருவரும் சாத்தியமற்ற கியூபேன் என்ற செயற்கை ஐதரோ கார்பன் மூலக்கூறை தயாரித்து ஒருங்கிணைத்தனர் [1][2]. அசாதாரண கனசதுர வடிவியல் காரணமாக அச்செயற்கை ஐதரோ கார்பனுக்கு இந்த பெயர் வழங்கப்பட்டது. 90 டிகிரி பிணைப்பு கோணங்கள் அதிக சிரமத்தை கொடுத்து இந்த மூலக்கூறு உருவாதலை அனுமதிக்காது என பல அறிவியலாளர்கள் நம்பினர். பிற்காலத்தில் இவர் பெரிய பல்வளைய ஐதரோகார்பன்களை கண்டறிந்தார் [5].

விருதுகள்

[தொகு]
  • ஆல்பிரட் பி. சுலோவன் அடித்தள் உறுப்பினர் (1963)[3]
  • ஆராய்ச்சி விருது, ரோக்ம் மற்றும் ஆசு நிறுவனம் (1975)[3]
  • அலெக்சாண்டர் வோன் அம்பொல்ட்டு பரிசு (1985)[3]
  • ஆலன் பெர்மான் ஆய்வு வெளியீடு விருது, கப்பல் ஆராய்ச்சி ஆய்வகம், அமெரிக்க கடற்படை (1995)[3]
  • ஆர்த்தர் சி கோப் அறிஞர் விருது, அமெரிக்க வேதியியல் கழகம் (1997)[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 P. Eaton and T. W. Cole, The Cubane System, J. Am. Chem. Soc., 86 (1964) 962. doi:10.1021/ja01059a072
  2. 2.0 2.1 P. Eaton and T. W. Cole, Cubane, J. Am. Chem. Soc., 86 (1964) 3157. doi:10.1021/ja01069a041
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Center for Oral History. "Philip E. Eaton". Science History Institute.
  4. Traynham, James G. (22 January 1997). Philip E. Eaton, Transcript of an Interview Conducted by James G. Traynham at Chicago, Illinois on 22 January 1997 (PDF). Philadelphia, PA: Chemical Heritage Foundation.
  5. Norman Allinger; Eaton, Philip E. (1983). "The geometries of pentaprismane and hexaprismane insights from molecular mechanics". Tetrahedron Letters 24 (35): 3697–3700. doi:10.1016/S0040-4039(00)94512-X. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்_ஈட்டன்&oldid=4041288" இலிருந்து மீள்விக்கப்பட்டது