பிரோன்தியர் ஏர்லைன்ஸ்
பிரோன்தியர் ஏர்லைன்ஸ் என்பது அமெரிக்காவினைச் சேர்ந்த குறைந்த கட்டண விமானச் சேவையாகும். இதன் தலைமையகம் அமெரிக்காவின், கொலரடோவில் உள்ள டென்வெர் ஆகும்.[1] இந்த விமானச்சேவை பிப்ரவரி 8, 1994 இல் நிறுவப்பட்டு, ஜூலை 5, 1994 இல் தனது முதல் செயல்பாட்டினைத் தொடங்கியது.[2] இந்த விமானச் சேவை கிளை விமானச் சேவையாகவும், இண்டிகோ மற்றும் எல்எல்சி’யின் வியாபாரக் குறியாகவும் செயல்படுகிறது.[3] இதன் மூலம் அமெரிக்கா முழுவதும் 52 இலக்குகளையும், ஆறு சர்வதேச இலக்குகளையும் கொண்டுள்ளது. இது இண்டிகோ பார்ட்னர்ஸ் நிறுவனத்தினை தனது முன்னோடியாகக் கொண்டுள்ளது.[4] இந்த விமானச் சேவை டென்வேர் சர்வதேச விமான நிலையத்தினை தலைமையகமாகக் கொண்டு பின்வரும் விமான நிலையங்கள் சம்பந்தப்பட்ட நகரங்களைக் கவனிக்கிறது. அவை:
ஜார்ஜியாவின், அட்லாண்டாவில் உள்ள அட்லாண்டா ஹார்ட்ஸ்ஃபீல்ட் –ஜாக்சன் சர்வதேச விமான நிலையம், ஃபுளோரிடாவின், மியாமியில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையம், லினோயிஸில் உள்ள சிக்காகோ ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையம், ஒஹியோவின், கிளிவ்லேண்ட்டில் உள்ள கிளிவ்லேண்ட் – ஹோப்கின்ஸ் சர்வதேச விமான நிலையம், ஃபுளோரிடாவின், ஓர்லாண்டோவில் உள்ள ஓர்லாண்டோ சர்வதேச விமான நிலையம், நியூ ஜெர்சியின், ட்ரெண்டன் பகுதிக்கு அருகில் உள்ள ட்ரெண்டன் – மெர்செர் விமான நிலையம் மற்றும் வாஷிங்க்டன் பகுதியில் அமைந்துள்ள வாஷிங்க்டன் டல்லெஸ் சர்வதேச விமான நிலையம். இவை மட்டுமின்றி டென்வேர் தலைமையகத்தினைக் கொண்டு, ராக்கி மௌன்டைன் ஸ்டேட்ஸ் பகுதிகளின் பயணிகளை மற்ற விமானச் சேவைகளுடன் தொடர்புபடுத்தும் கிரேட் லேக்ஸ் ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனத்துடன் கோட்ஷேர் ஒப்பந்தத்தினையும் கொண்டுள்ளது.
முந்தைய விமானச் சேவைகள்
[தொகு]ஃப்ராண்டையர் எக்ஸ்பிரஸ்
[தொகு]சௌடாஃக் ஏர்லைன்ஸ் எனும் விமானச்சேவை 12 எம்பெரர் 135 மற்றும் 145 ஜெட் ரக விமானங்களைக் கொண்டு செயல்பட்டது. 2011 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் இந்த விமானச்சேவை நிறுவனம் ஃப்ராண்டையர் விமானச்சேவையாக மாற்றப்பட்டு செயல்பட ஆரம்பித்தது. மாற்றப்பட்டபோது தலைமையகமாக இருந்த மில்வௌகீ தலைமையகத்தினைத் தவிர்த்ததால், ஃப்ராண்டையர் எக்ஸ்பிரஸ் ERJ - 145 விமானத்தினால் மில்வௌகீ – ரினேலேண்டெர் வழித்தடத்தில் மட்டுமே செயல்பட முடிந்தது. இருப்பினும் ஃப்ராண்டையர் நிறுவனத்தின் ரினேலேண்டெர் பகுதிக்கான விமானச்சேவை ஜனவரி 3, 2013 ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. அதன்பிறகு சௌடாஃக் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னிடம் இருந்த பிற விமானங்களை மற்ற பங்குதாரர்களிடம் அளித்தது.
ஃப்ராண்டையர் ஜெட்எக்ஸ்பிரஸ்
[தொகு]பிப்ரவரி 2002 ஆம் ஆண்டில், தனது முதல் வியாபார நிறுவனமாக, ஃப்ராண்டையர் ஜெட்எக்ஸ்பிரஸ் விமானச் சேவையினை தொடங்கினர். இது மேஸா ஏர்லைன்ஸ் மூலம் CRJ-200 ஐப் பயன்படுத்தி செயல்படுத்தப்பட்டது. மற்ற எக்ஸ்பிரஸ் விமானச்சேவைகளைப் போலவே, ஃப்ராண்டையர் ஜெட்எக்ஸ்பிரஸ் நிறுவனமும் டென்வேர் பகுதியில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் விமானச் சேவையினையும், அது சம்பந்தப்பட்ட சந்தைப் பகுதியினையும் குறிவைத்தது. ஆனால் அவற்றினால் போதுமான அளவிற்கு பயணிகளை அளிக்க முடியவில்லை. இதனால் ஃப்ராண்டையர் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-318 ஐக் கொண்ட சிறிய விமானக்குழுவினைக் கொண்டு செயல்படுத்த முடியவில்லை. இருப்பினும் சிறிய ஜெட் விமானங்கள் துணைகொண்டு தனது தொழிலை இலாபாகரமான வணிகமாக மாற்ற முடிந்தது.
இலக்குகள்
[தொகு]பிரோன்தியர் ஏர்லைன்ஸ் தற்போது கோஸ்டா ரிகா, டொமினிசியன் குடியரசு, ஜமைக்கா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய பகுதிகள் அனைத்திலும் சேர்த்து 59 விமான இலக்குகளைக் கொண்டுள்ளது. டிசம்பர் 2014 இன் படி, ஃப்ராண்டையர் விமானச்சேவை தனிப்பட்ட முன்பதிவின்கீழ் இயங்கும் விமானச்சேவையினை பல சர்வதேச இலக்குகளுக்கு செயல்படுத்துகிறது. இதனை ஆப்பிள் வேகஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துகிறது.
கோட்ஷேர் ஒப்பந்தங்கள்
[தொகு]பிரோன்தியர் ஏர்லைன்ஸ் கிரேட் லேக்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் கோட்ஷேர் ஒப்பந்தத்தினைக் கொண்டுள்ளது. இதன் மூலம், டென்வேர் மற்றும் பொனிஃக்ஸ் விமான வழித்தடங்களை இணைக்கிறது. [6]
விமானக் குழு
[தொகு]ஜூலை 29, 2015 இன் படி பிரோன்தியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானக் குழு பின்வரும் விமானங்களைக் கொண்டுள்ளது.
விமானம் | செயல் நிலையில் இருப்பது | ஆர்டர் | பயணிகள் | குறிப்புகள் | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ஏர்பஸ் A319-100 | 34 | — | 150 | பழைய விமானங்கள் ஓய்வுபெற உள்ளது | |||||
ஏர்பஸ் A319neo | — | 18 | 158 | விநியோகங்கள் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளன. | |||||
ஏர்பஸ் A320-200 | 22 | 4 | 180 | ||||||
ஏர்பஸ் A320neo | — | 62 | 180 | விநியோகங்கள் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளன. | |||||
ஏர்பஸ் A321-200 | — | 19 | 230 | விநியோகங்கள் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளன. | |||||
மொத்தம் | 56 | 103 |
விமானம் | இடமாற்றப்படும் விமானம் | ஓய்வுபெற்ற ஆண்டு |
---|---|---|
ஏர்பஸ் A318-100 | A319/A320 | 2013 |
எம்பெரர் E-170 | A319/A320 | 2013 |
எம்பெரர் E-190 | A319/A320 | 2013 |
போயிங்க் 737-200 | A319/A320 | 2004 |
போயிங்க் 737-300 | A319/A320 | 2005 |
உயர்தர வழித்தடங்கள்
[தொகு]பிரோன்தியர் ஏர்லைன்ஸ் டென்வேர் – அட்லாண்டா, அட்லாண்டா – டென்வேர், டென்வேர் – லாஸ் வேஜாஸ் மற்றும் டென்வேர் – வாஷிங்க்டன் ஆகிய வழித்தடங்களை உயர்தர வழித்தடங்களாகக் கொண்டுள்ளது.[5] இந்த வழித்தடங்களில் முறையே வாரத்திற்கு 56, 56, 34 மற்றும் 28 விமானங்களைச் செயல்படுத்துகிறது. இவை தவிர சில குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தப்படும் விமானங்களை புண்டா கானா – கிளிவ்லேண்ட் மற்றும் மோன்டேகோ பே – செயின்ட் லுயிஸ் வழித்தடங்களில் செயல்படுத்துகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ வார்ப்புரு:Cite press
- ↑ "Frontier Airlines - Our History, 1993–1998". Frontier Airlines. Archived from the original on மே 24, 2013. பார்க்கப்பட்ட நாள் July 5, 2013.
- ↑ "Indigo Partners Completes Acquisition Frontier Airlines". Business Wire. 2013-12-03. http://www.businesswire.com/news/home/20131203006643/en/Indigo-Partners-Completes-Acquisition-Frontier-Airlines. பார்த்த நாள்: 2013-12-03.
- ↑ "Indigo Partners Completes Acquisition of Frontier Airlines". Business Wire. December 3, 2013. http://www.businesswire.com/news/home/20131203006643/en/Indigo-Partners-Completes-Acquisition-Frontier-Airlines.
- ↑ "About Frontier Airlines". About Frontier Airlines. 25 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-11-03.