பிரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-பிரோன்
4-பிரோன்

பிரோன்கள் (Pyrones) எனப்படுபவை பல்லினவளைய வேதிச்சேர்மங்களின் ஒரு வகையாகும். இவை பிரனோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகைச் சேர்மங்களில் ஒரு நிறைவுறாத ஆறு உறுப்பு வளையத்தில் ஓர் ஆக்சிசன் அணுவும் ஒரு கீட்டோன் வேதி வினைக்குழுவும் இடம்பெற்றிருக்கும். [1] 2-பிரோன், 4-பிரோன் என இரண்டு மாற்றியன் சேர்மங்களும் காணப்படுகின்றன. 2-பிரோன் α-பிரோன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. குமாரின் வளையச் சேர்மத் திட்டத்தில் இயற்கையாகவே ஒரு பகுதியாக இது இடம்பெற்றிருக்கும். 4-பிரோன் மாற்றியம் γ-பிரோன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. குரோமோன், மால்டோல் மற்றும் கோச்சிக் அமிலம் போன்ற சில வேதிப்பொருட்களில் இது காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரோன்&oldid=3338822" இலிருந்து மீள்விக்கப்பட்டது