பிரேமதாசா விடுதலைப்புலிகள் ஒப்பந்தம், 1989 - 1990

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரேமதாசா புலிகள் ஒப்பந்தம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அப்போதையை இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவுக்குமிடையே ஏற்படுத்தப்பட்ட உத்யோகபூர்வமற்ற ஒரு ரகசிய உடன்படிக்கையை குறிக்கின்றது. இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 காரணமாக இலங்கையில் இருந்த இந்திய சமதானப் படைகளை வெளியேற்றும் நோக்குடன் இவ்வுடன்படிக்கை அமைந்தது. இவ்வுடன்படிக்கை 1990 இறுதிப்பகுதியில் முறிவடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே பிரேமதாசா பின்னர் கொலை செய்யப்பட்டார் என பொதுவாக கருதப்படுகின்றது.