உள்ளடக்கத்துக்குச் செல்

பிரெவோசுட்டு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரெவோசுட்டு வினை (Prévost reaction) என்பது ஆல்கீனை, பென்சாயிக் அமிலத்தின் அயோடின் மற்றும் வெள்ளி அசிட்டேட்டால் எதிரெதிர் முப்பரிமாண அமைப்புடன் கூடிய விசினல் டையாலாக மாற்றும் ஒரு வினையாகும் [1][2][3]. சார்லசு பிரெவோசுட்டு (1889-1983) இவ்வினையைக் கண்டறிந்தார்.

பிரெவோசுட்டு வினை
பிரெவோசுட்டு வினை

வினை வழிமுறை

[தொகு]

வெள்ளி பென்சோயேட் (1) மற்றும் அயோடின் இடையேயான வினை மிகவும் விரைவானது ஆகும். இவ்வினை மிகவும் விரீயமான அயோடினியம் பென்சோயேட் இடைநிலை (2) விளைபொருளை உற்பத்தி செய்கிறது. அயோடினியம் உப்பு (2) ஆல்கீனுடன் ஈடுபடும் வினையால் மற்றொரு குறுகிய கால அயோடினியம் உப்பு (3) உருவாகிறது. பென்சோயேட்டு உப்பின் அணுக்கரு கவர் பதிலீட்டு வினையால் (SN2) எசுத்தர் உருவாகிறது.(4) மற்றொரு வெள்ளி அயனி பென்சோயேட்டு எசுத்தருக்கு அடுத்து அருகிலுள்ள தொகுதியை பதிலீடு செய்து ஆக்சோனியம் உப்பைக் கொடுக்கிறது.(5) பென்சோயேட்டு எதிர்மின் அயனியால் நிகழ்த்தப்படும் இரண்டாவது (SN2) பதிலீட்டு வினை தேவையான டையெசுத்தரைக் கொடுக்கிறது. (6)

பிரெவோசுட்டு வினையின் வினை வழிமுறை
பிரெவோசுட்டு வினையின் வினை வழிமுறை

நீராற்பகுப்பின் இறுதி படிநிலையில் எசுத்தர் குழுக்கள் எதிர்-டையால் சேர்மத்தைக் கொடுக்கிறது. இது உட்வார்டு சிசு ஐதராக்சிலேற்ற வினையில் உருவாகும் விளைபொருளுக்கு எதிர்மாறானது. இவ்வினையில் ஒருபக்க சேர்ப்பு வினை விளைபொருள் உருவாகிறது.

இதையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெவோசுட்டு_வினை&oldid=2749356" இலிருந்து மீள்விக்கப்பட்டது