பிரெடெரிக் வோன் எஃப்னெர் - ஆல்டெனக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரெடெரிக் வோன் எஃப்னெர் - ஆல்டெனக்
1904 Hefner-Alteneck.jpg

பிரெடெரிக் என்ரிக் பிலிப் பிரான்சு வோன் எஃப்னெர் - ஆல்டெனக் (Friedrich Heinrich Philipp Franz von Hefner-Alteneck) ஒரு செருமானிய மின்பொறியாளர் ஆவார். இவர் 1845 ஆம் ஆண்டில் ஆசுசாஃபென்பர்கில் பிறந்த இவர் பெர்லின் நகருக்கு அருகிலுள்ள பைசுதோர்ஃபில் 1904 ஆம் ஆண்டு இறந்தார். மின் பொறியாளரான இவர் வெர்னர் வோன் சீமென்சுக்கு நெருங்கிய உதவியாளர்களுள் ஒருவராக இருந்தார். எஃப்னெர் விளக்கைக் கண்டுபிடித்த காரணத்தால் இவர் பெரும்பாலும் அறியப்படுகிறார். செருமனி. ஆசுதிரியா, சிகாண்டிநேவியா போன்ற நாடுகளில் 1890 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டு வரையில் ஒளியியலில் ஆற்றலாகக் கருதப்படும் ஒளிச்செறிவை அளவிடுவதற்கு இவ்விளக்கு பயன்படுத்தப்பட்டது. ஒளிச்செறிவின் அலகு எஃப்னெர் கெர்சு என்ற அளவால் அளவிடப்பட்டது. பின்னர் இவ்வளவு முறை அனைத்துலக அளவு முறையில் பின்னர் கேண்ட்லா என மாற்றப்பட்டது[1].

1846 ஆம் ஆண்டில் இவர் இராயல் சுவீடிய அறிவியல் கழகத்தினுடைய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hefner unit, or Hefner candle". Sizes.com (30 May 2007). பார்த்த நாள் 25 Feb 2009.