பிரெடி வினைப்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரெடி வினைப்பொருள் (Froehde reagent) என்பது ஒரு எளிய குறியீடாக,சோதனையாகப் பயன்படுத்தப்படுகிறது, அல்கலாய்டுகள், குறிப்பாக ஓபியாய்டுகள் மற்றும் பிற சேர்மங்களை உத்தேசமாக அடையாளம் காணப்படுகிறது. இது சூடான, அடர் கந்தக அமிலத்தில் கரைக்கப்பட்ட மாலிப்டிக் அமிலம் அல்லது மாலிப்டேட் உப்பு கலவையால் ஆனது. பின்னர் அது சோதனை செய்யப்படும் பொருள் மீது சொட்டப்படுகிறது.

100 மில்லி சூடான, அடர் (95-98%) கந்தக அமிலத்தை 0.5 கிராம் சோடியம் மல்லிபிடேட் அல்லது மாலிபிடிக் அமிலத்தில் சேர்ப்பது அமெரிக்க நீதித்துறையின் தயாரிப்பு முறையாகும்.[1]

வர்ஜினியாவின் தடய அறிவியல் துறை 100 மில்லி செறிந்த H2SO4-இற்கு 0.5 கிராம் அமோனியம் மலிபிடேட்டைப் பயன்படுத்துகிறது.[2]

வெப்பப்படுத்தப்படாத கந்தக அமிலம் குறைந்த அபாயகரமான முறையில் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படலாம், ஆனால் மாலிப்பிடேட் கரைவதற்கு 2-4 மணி நேரம் அனுமதிக்கப்பட வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Color Test Reagents/Kits for Preliminary Identification of Drugs of Abuse" (PDF). Law Enforcement and Corrections Standards and Testing Program. July 2000. பார்க்கப்பட்ட நாள் 2011-07-24.
  2. "Controlled Substances Procedures Manual" (PDF). Virginia Department of Forensic Science. 2013. Archived from the original (PDF) on 2013-08-13. பார்க்கப்பட்ட நாள் 2013-08-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெடி_வினைப்பொருள்&oldid=3563657" இலிருந்து மீள்விக்கப்பட்டது