பிரெஞ்சு வினை உரிச்சொல்
பிரெஞ்சு வினை உரிச்சொற்கள் ஒரு பெயர் உரிச்சொல்லையோ, வினைச்சொல்லையோ, வாக்கியப்பகுதியையோ அல்லது மற்றொரு வினை உரிச்சொல்லையோ மாற்றவே பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் உருபு ஏதும் கொள்வதில்லை; அதாவது, அவைகள் தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொள்வதில்லை.
(எ-டு)
௧. Le professeur parle lentement. (ஆசிரியர் மெதுவாகப் பேசுகிறார்.)
(ஒரு வினைச்சொல்லை மாற்றியமைத்துள்ளது)
௨. Le professeur parle bien lentement. (ஆசிரியர் மிகவும் மெதுவாகப் பேசுகிறார்.)
(ஒரு வினை உரிச்சொல்லை மாற்றியமைத்துள்ளது)
௩. Le professeur est très gentil. (ஆசிரியர் மிகவும் நல்லவர்.)
(ஒரு பெயர் உரிச்சொல்லை மாற்றியமைத்துள்ளது)
வினை உரிச்சொற்களின் வகைகள்
[தொகு]௧. முறையை குறிக்கும் வினை உரிச்சொல் (Adverbes de manière):
bien, mal, ensemble, constamment, convenablement, aisément
௨. காலத்தை குறிக்கும் வினை உரிச்சொல் (Adverbes de temps):
aujourd'hui, tôt, longtemps, quelquefois, souvent, toujours
௩. இடத்தை குறிக்கும் வினை உரிச்சொல் (Adverbes de lieu):
devant, derrière, où, près, loin, dehors, ici, là
௪. அளவை குறிக்கும் வினை உரிச்சொல் (Adverbes de quantité):
beaucoup, trop, aussi, assez, tout, très, moins
௫. ஒப்புதலை குறிக்கும் வினை உரிச்சொல் (Adverbes d'affirmation et de doute):
oui, si, naturellement, probablement, peut-être
௬. எதிர்மறையை குறிக்கும் வினை உரிச்சொல் (Adverbes de négation):
non, ne...pas, ne...aucunement, ne...pas du tout, ne...jamais
௭. வினாவை குறிக்கும் வினை உரிச்சொல் (Adverbes d'interrogation):
combien, comment, où, pourquoi, quand
௮. வினை உரிச்சொல் வாக்கியங்கள் (Locutions adverbiales):
en attendant, petit à petit, de temps en temps, à la longue, à peu près, à propos, en même temps, quelque part, par hasard, bien sûr, tout de suite, sans doute, à moitié
உருவாக்கம்
[தொகு]௧. பொதுவிதி
௨. சிறப்புவிதி