பிரீத்தி தாகியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரீத்தி தாகியா
Preeti Dahiya
பிரீத்தி தாகியா
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியா
பிறப்பு16 சூன் 2004
சிலானா,சோனிபத்து, அரியானா
விளையாட்டு
விளையாட்டுகுத்துச் சண்டை
எடை வகுப்புஇலகுரக எடை (60 கிகி)
பதக்கத் தகவல்கள்
பெண்கள் பயில்முறை வீரர்
நாடு  இந்தியா
ஆசிய வெற்றியாளர் போட்டி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2022 அம்மான் இறகு எடை

பிரீத்தி தாகியா (Preeti Dahiya) [1] இந்தியாவைச் சேர்ந்த ஒரு பயில்முறை குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் குத்துச்சண்டை வெற்றியாளர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். [2] [3] [4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பிரீத்தி தாகியா 2004 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதியன்று அன்று தில்லியின் பதே நகரில் பிறந்தார், ஆனால் இவரும் அவரது குடும்பமும் அரியானா மாநிலத்தின் சோனிபத்து மாவட்டத்தில் உள்ள சிலானா கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர். இவரது தந்தை அரிந்தர் தாகியா ஒரு விவசாயியாவார். இவரது தாயார் பூனம் ஓர் இல்லத்தரசி என அறியப்படுகிறார்.

தொழில்[தொகு]

இந்திய கபடி அணியின் கேப்டன் தீபக் நிவாசு ஊடாவிடம் இருந்து உத்வேகம் பெற்று 2016 ஆம் ஆண்டில் குத்துச்சண்டை விளையாட்டைத் தொடங்கினார். பயிற்சியாளர் மகேந்திர சிங் டாக்காவின் கீழ் ஆறு மாத பயிற்சிக்குப் பிறகு, அதே ஆண்டில் பள்ளி அளவிலான தேசிய வெற்றியாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தனது பயிற்சியைத் தொடர்ந்த இவர் 2019 ஆம் ஆண்டில் ஆசிய இளையோர் குத்துச்சண்டை வெற்றியாளர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் குத்துச்சண்டை வெற்றியாளர் போட்டியில் இலகுரக எடைப்பிரிவில் (60 கிலோ) போட்டியிட்டார். இப்போட்டியில் கசக்கசுதானின் சுல்டிசு சயக்மெடோவாவை 3–2 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தார். [5] [6] [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian Boxing Federation Boxer Details". indiaboxing.in. பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
  2. "Preeti Dahiya bags gold as India end campaign on high with 39 medals at Asian Youth Boxing C'ship". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
  3. "Preeti Dahiya Leads India In Record Medal Haul At Asian Youth Championships". www.outlookindia.com/ (in ஆங்கிலம்). 2022-01-10. பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
  4. Sportstar, Team (2021-08-31). "Preeti Dahiya, Sneha Kumari, Khushi, Neha win gold at Asian Youth Boxing Championships". sportstar.thehindu.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
  5. "Aim to be first woman from country to win gold in Olympics: Haryana boxer Preeti Dahiya". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
  6. "Preeti Dahiya bags gold as India end campaign on high with 39 medals at Asian Youth Boxing Championship". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-08-31. பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
  7. SPORTS, FISTO (2021-08-31). "Preeti Dahiya and three other youth women bag gold as India end campaign on a high with 39 medals at ASBC Asian Youth & Junior Boxing Championships". www.fistosports.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தி_தாகியா&oldid=3894771" இலிருந்து மீள்விக்கப்பட்டது