பிரியா பிரகாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியா பிரகாசு
Priya Prakash
2018 ஆம் ஆண்டு பிரியா பிரகாசு
பிறப்பு1990 (அகவை 32–33)
குருகிராம், இந்தியா
கல்விஇரிசு பள்ளத்தாக்கு பள்ளி
லேடி சிறீராம் மகளிர் கல்லுரி
அறியப்படுவதுஎல்த்து செட்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி

பிரியா பிரகாசு (Priya Prakash) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபராவார். எல்த்து செட்கோ என்ற அமைப்பின் நிறுவனராகவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.எல்த்துசெட்கோ என்பது இந்தியாவை தளமாகக் கொண்ட ஒரு சுகாதார நிறுவனமாகும். பள்ளிகளுக்கு சுகாதார திட்டங்கள், கல்வி, மருத்துவ மதிப்பீடுகள் மற்றும் காப்பீட்டு சேவைகள் போன்றவற்றை இந்நிறுவனம் வழங்குகிறது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

பிரியா பிரகாசு ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு அருகில் இருக்கும் ரிசி பள்ளத்தாக்கு பள்ளியிலும் புது தில்லியில் உள்ள லேடி சிறீராம் மகளிர் கல்லூரியிலும் படித்தார். [1] வளர்ந்து வரும் பருவத்தில் அதிக எடையுடன் இருந்த காரணத்தால் சக தோழியர்களால் கேலி செய்யப்பட்டார். இதனால் கல்லூரியில் உணவுப் பழக்க வழக்கங்களில் சீர்குலைவை ஏற்படுத்தியது. 2012 ஆம் ஆண்டில் இவர் ஓர் உடற்பயிற்சி கூடத்தில் சேர ஊக்கமளித்தது, அங்கு இவர் ஓர் உடற்பயிற்சி பயிற்சியாளரை சந்தித்தார். உணவோடு ஆரோக்கியமான உடல் நலம் பேணும் பழக்கம் ஏற்படுத்த ஊக்குவித்தார். [2]

பிரியா பிரகாசு ஃபோர்ப்சின் 30 வயதிற்குட்பட்ட சுகாதாரம் மற்றும் அறிவியலில் சிறந்த ஆசியா 2018 பிரிவில் 2018 ஆம் ஆண்டின் யூனிலீவர் இளம் தொழில்முனைவோர் என்ற விருதை வழங்கி சிறப்பித்தது. 2019 ஆம் ஆண்டில் பிரியாவுக்கு உலகளாவிய குடிமகன் பரிசும் கிடைத்தது. [3]

வேலையைத் தவிர பிரியா தில்லி மாநில அளவிலான பளுதூக்குபவர், பேச்சாளர் , பயிற்சியாளர் மற்றும் ஆர்வமுள்ள சுகாதார பதிவர் [4] போன்ற பல்வேறு முகங்களுடன் இயங்கினார்.

தொழில்[தொகு]

லேடி சிறீராம் மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, பிரியா நிதித் தொழிலைத் தொடங்கினார். [1] 2014 ஆம் ஆண்டுக்குள் எல்த்து செட்கோ என்ற அமைப்பை நிறுவினார், இது இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியமான நடத்தையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.[5] மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, எல்த்துசெட்கோ அமைப்பிற்கு இந்தியா முழுவதும் 16 மருத்துவமனைகள், 90 மருத்துவர்கள் மற்றும் 35 தனி மருத்துவமனைகளுடனும் கூட்டு சேர்ந்தது. [6]

2018 ஆம் ஆண்டில் எல்த்து செட்கோவின் விரிவாக்கம் காரணமாக ஃபோர்ப்ஸின் 30 வயதுக்குட்பட்ட 30 ஆசியர்கள் பட்டியலில் பிரியா பிரகாசின் பெயரும் இடம்பெற்றது. [7] 70,000 நகரங்களில் 300 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆரோக்கியமான உணவை ஊக்குவிப்பதற்காக இவரது அமைப்பு வளர்ந்தது. 80,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மாணவர்களை பாதிக்கும் என்று மதிப்பிடப்பட்டது. [8] குழந்தைகளின் உடல்நலம் மற்றும் வளர்ச்சியைக் கண்காணிக்க பள்ளியின் போது சுகாதார மதிப்பீட்டை நடத்துவதன் மூலம் பள்ளிகளில் எல்த்து செட்கோ சேர்க்கப்பட்ட செயலாக்கங்களில் ஒன்றானது. நோயின் ஆரம்ப அறிகுறிகள் விரைவாக கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்பதும் இவ்வமைப்பின் நோக்கமாக இருந்தது.[9] மருத்துவத் தேர்வுகளின் முடிவில், எதிர்கால ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை மேம்படுத்துவது மற்றும் மதிப்பீடு செய்வது குறித்து பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. [10] உலக சுகாதார தினத்தை நினைவுகூரும் வகையில் வருடாந்திர எல்த்து செட்கோ ஓட்டம் ஏற்பாடு செய்யவும் இவர் உதவினார். [11] அடுத்த ஆண்டில் கார்டியர் பெண்கள் முன்முயற்சியின் இறுதிப் போட்டியாளராக இவர் இருந்தார். [12] [13] இதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில், சிசுகோ யூத் லீடர்சிப் பரிசை வென்றார். இதில் எல்த்து செட்கோவுக்கு $ 250,000 மானியம் வழங்கப்பட்டது. [14]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "RAISING A HEALTHY GENERATION- PRIYA PRAKASH". May 17, 2016. http://delhiitesmagazine.com/raising-a-healthy-generation-priya-prakash/. 
 2. Avlani, Shrenik (July 25, 2019). "This founder’s healthy habits rub off on her team". https://www.livemint.com/mint-lounge/business-of-life/this-founder-s-healthy-habits-rub-off-on-her-team-1564059833378.html. 
 3. "On International Youth Day HealthSetGo and GAIN launch the India Food Systems Summit" (in en-US). 2021-08-12. https://indiaeducationdiary.in/on-international-youth-day-healthsetgo-and-gain-launch-the-india-food-systems-summit/. 
 4. "An appetite for change". https://www.newindianexpress.com/cities/delhi/2021/aug/12/an-appetitefor-change-2343654.html. 
 5. "This 24/7 entrepreneurial attitude is truly enjoyable!’‘". June 5, 2018. https://iamanentrepreneur.in/shepreneurs/247-entrepreneurial-attitude-truly-enjoyable/. 
 6. Deepak, Sukant (January 20, 2017). "'As a young woman, people don't take you seriously at first'". https://www.indiatoday.in/magazine/nation/story/20170130-priya-prakash-good-news-issue-985594-2017-01-20. 
 7. Behal, Ambika (March 6, 2018). "Meet Some Of The Notable Indians On Forbes 30 Under 30 Asia 2018 List". https://www.forbes.com/sites/abehal/2018/03/26/meet-some-of-the-notable-indians-on-forbes-30-under-30-asia-2018-list/#69cf85351dde. 
 8. "Forbes 30 Under 30 In Asia – Many Young Female Entrepreneurs Included". March 29, 2018. https://www.iwecfoundation.org/news/forbes-30-30-asia-many-young-female-entrepreneurs-included/. 
 9. "Meet Priya Who Is Building A Healthier Tomorrow For Our Kids". October 17, 2019. https://sheroes.com/articles/meet-priya-who-is-building-a-healthier-tomorrow-for-our-kids/NTA1Ng==. 
 10. Leah Rodriguez (November 22, 2019). "Meet the Cisco Youth Leadership Award Finalist Who Is Ensuring Schoolchildren in India Stay Healthy". https://www.globalcitizen.org/en/content/priya-prakash-global-citizen-cisco-youth-leader/. 
 11. "World Health Day Celebrated At Gurugram With HealthSetGo Run 2019". April 23, 2019. http://bwpeople.businessworld.in/article/World-Health-Day-Celebrated-At-Gurugram-With-HealthSetGo-Run-2019/23-04-2019-169621/. 
 12. Michael, Maya (March 7, 2019). "Here are the 21 finalists of the Cartier Women’s Initiative 2019". https://www.prestigeonline.com/my/people-events/people/here-are-the-21-finalists-of-the-cartier-womens-initiative-2019/. 
 13. Pandey, Snigdha (2019). "The Desi Touch At Cartier Women’s Initiative Awards". https://www.dissdash.com/2019/05/02/the-desi-touch-at-cartier-womens-initiative-awards/. 
 14. Calderwood, Imogen (December 21, 2019). "Health Activist Priya Prakash Wins the Cisco Youth Leadership Prize". https://www.globalcitizen.org/en/content/priya-prakash-wins-the-cisco-youth-leadership-priz/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_பிரகாசு&oldid=3277459" இருந்து மீள்விக்கப்பட்டது