பிரின்ஸ் ஆப் பெர்சியா : சான்ட்ஸ் ஆப் டைம் (2010) திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரின்ஸ் ஆப் பெர்சியா : சான்ட்ஸ் ஆப் டைம் (

Prince of Persia: The Sands of )Time

(தமிழ் : பெர்சியாவின் இளவரசன் : காலத்தின் மணல்துகள்கள் ) என்பது 2010 ல் வெளிவந்த மாயாஜால திரைப்படம் ஆகும் . இந்த திரைப்படம் ஜெர்ரி பக்ஹெய்மர் ஆல் தயாரிக்கப்பட்டு வால்ட் டிஸ்னி ஸ்டூடியோ நிறுவனத்தால் வெளியிடப்பட்டது . இந்த திரைப்படம் உபி சாப்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரின்ஸ் ஆப் பெர்சியா என்ற கணினி விளையாட்டின் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது .இந்த திரைப்படத்தில் ஜேக் க்ளின்கால் , பென் கிங்க்ஸ்லே , ஜெம்மா அர்டிறான் நடித்துள்ளனர்

பிரின்ஸ் ஆப் பெர்சியா : சான்ட்ஸ் ஆப் டைம் திரைப்பட தலைப்பு  

கதை சுருக்கம்[தொகு]

2500 ஆண்டுகளுக்கு முன்னர் பெர்சியா என்ற நகரத்தில் வாழ்ந்துகொண்டிருந்த சாதாரண சிறுவனாக இருந்த தஸ்தான் அரசர் ஷரமனால் தேர்ந்தெடுக்கப்பட்டு வளர்ப்பு  மகனாக வளர்க்கப்படுகிறார் , பின்னர் ஒரு கட்டத்தில் தஸ்தான் அரசரின் மகன்களான டஸ் மற்றும் கார்சீவ்க்கு உதவி செய்து அலமன்ட் எனும் புனித நகரத்தை கைப்பற்றுகின்றனர் , ஒரு மோசமான சம்பவத்தால் அரசர் ஷர்மானின் மறைவுக்கு பிறகு தஸ்தான்தான் அரசரின் மறைவுக்கு காரணம் என பழி சுமத்தப்படுகிறார் .

ஒரு கட்டத்தில் அலமன்ட் இன் இளவரசி டாமினே மூலமாக காலத்தை கடக்கும் சக்தியுள்ள மாயாஜால கூர்வாள் பற்றி தெரிந்துகொள்கிறார் , இந்த கூர்வாளை அடையத்தான் இந்த சதி அரசரின் இளைய சகோதரர் நிசாம் மூலமாக தீட்டபட்டுள்ளது என்பதையும் புரிந்துகொள்கிறார் ,

நிசாம் ஏற்படுத்திய பல தடைகளையும் போராட்டங்களையும் கடந்து உண்மையை சகோதரருக்கு புரியவைக்க நினைக்கிறார் நிறைய போராட்டங்களுக்கு பின்னர் நிசாம்  காலத்தை கடக்கும் கூர்வாளில் சக்தியை கொடுக்கும் மாயாஜால மணல் உள்ள இடத்தை நிசாம் தேடிக்கொண்டு இருப்பதை தஸ்தான் புரிந்துகொள்கிறார் , அந்த காலத்தின்  மணல் தவறாக பயன்படுத்தப்பட்டால் சபிக்கப்பட்ட மணல் புயல் மூலமாக உலகமே அழிந்துவிடும் என்பதையும் தெரிந்துகொள்கிறார் ,

அங்கே உருவான சம்பவங்களால் இளவரசன் மீண்டும இந்த சம்பவங்கள் எல்லாமே நடப்பதற்கு முன்னதாகவே உள்ள கடந்தகாலத்துக்கு செல்கிறார் , அவருக்கு நடந்த சம்பவங்களின் நினைவுகள் இருந்ததால் நிசாமின் திட்டத்தை புரியவைக்கிறார் , அவர் நேசித்த  இளவரசி டாமினேயை திருமணம் செய்துகொள்கிறார் .