பிரான்சு உருசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரான்சு உருசா (பிறப்பு பூடபெசுத்து 14 அக்டோபர் 1957) ஓர் அங்கேரிய இந்தியவியல் ஆய்வாளரும் மெய்யியலாளரும் பேராசிரியரும் ஆவார்.

இவர் ஃபசேகாசு மிஃகலி உயர்நிலைப் பள்ளியில் கணிதத்தில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். இவர் இயோத்துவோசு இலோராண்டு பல்கலைக்கழகத்தில் (ELTE) இந்தியவியல் மெய்யியல் துறையில் 1982 இல் பட்டம் பெற்றார். இந்துமதம், புத்தமதம் பற்றிய துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். கியேட்டு புத்தக் கல்லூரியில் (Gate of Buddhist College) 1994 முதல் 2009 வரை கற்பித்து வந்தார். 2007 முதல் 2009 வரை தலைவராக (Rector) இருந்தார். இந்திய மொழிகள் பற்றியும், கிரேக்க-இந்திய மெய்யியல் தொடர்புகள் பற்றியும் ஆய்வுகள் செய்துள்ளார். இந்திய-ஐரோப்பிய மொழிகளில் திராவிடமொழிகளின் தாக்கத்தைப் பற்றி ஆய்வுகள் செய்துள்ளார்[1]

நூல்கள்[தொகு]

  1. Sankara: A Brahma-szútra magyarázata, Bp., Kossuth Könyvkiadó, 1996 (சங்கரா:பிரம்ம சூத்திர விளக்கம், பூடபெசுத்து, கோசுத்து வெளியீடு, 1996)
  2. A klasszikus szánkhja filozófiája, Bp., Farkas Lőrinc Imre Kiadó, 1997 (செவ்விலக்கிய சங்கரர் மெய்யியல், இம்ரெ ஃபர்காசு இலாரன்சு பதிப்பகம், 19970

The classic szánkhja philosophy, Bp. Imre Farkas Lawrence Press, 1997

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Ruzsa, Ferenc, "The influence of Dravidian on Indo-Aryan phonetics", XIVth World Sanskrit Conference, Kyōtō, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சு_உருசா&oldid=3857236" இலிருந்து மீள்விக்கப்பட்டது