பிரான்சிஸ்கோ டெக்லி ஏஞ்சலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஃபிரான்செஸ்கோ டெக்லி ஏஞ்சலி அல்லது ஏஞ்சலிஸ் (1567 - 1628) ஒரு இத்தாலிய இயேசு சபைச் சமயப்பரப்பாளர். இவர் காலனியாதிக்கத்திற்கு முந்தைய காலத்தில் எத்தியோப்பியாவில் கிறித்தவ சமயப் பரப்புரையில் ஈடுபட்டோரில் மிக முக்கியமானவர்.

வாழ்க்கை[தொகு]

1583 ஆம் ஆண்டு இவர் இயேசு சபையில் இணைந்தார். 1602 முதல் 1604 வரை மேற்கிந்தியத் தீவுகளில் மிசனரி சேவையில் ஈடுபட்ட இவர் கடைசியாக எத்தியோப்பியா பயணித்து அங்கேயே தங்கினார். அங்கே இவரை மக்கள் 'எப்போதும் ஆனந்தமாய் இருப்பவர்' என அழைத்தனர்.

அடுத்தடுத்து ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டு எத்தியோப்பிய அரசர்களிடையேயும் ஏஞ்சலி செல்வாக்கு மிகுந்தவராக விளங்கினார். அரசரின் சகோதரர் மற்றும் அரசவைத் தலைமைப் பிரபு உள்ளிட்ட பலரையும் அவர் கிறித்தவ சமயத்திற்கு மாற்றினார். என்றாலும் அவரால் அபீசினியன் சபையை உரோமன் கத்தோலிக் சபையுடன் ஒருங்கிணைக்க முடியவில்லை.

பணிகள்[தொகு]

விவிலியம் உள்ளிட்ட பெரும்பாலான கிறித்தவ நூல்களை ஏஞ்சலி அகசி மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்.