பிரம்ராசோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரம்ராசோக்கின் ஓவியம்

பிரம்ராசோக் (Bramrachokh)[1] அல்லது பிராம் பிராம் சௌக் என்பது காஷ்மீரி நாட்டுப்புற கதைகளின்படி, பாழடைந்த காட்டுப்பகுதிகளிலும், மலை உச்சியிலும் வசிக்கும் ஓநாய் போன்ற புராண உயிரினமாகும். கடும் குளிரில் இவ்வுயிரினம் தனது தலையில் தீ எரியும் பானையை வைத்து, மலையேறும் மக்களை வழித்தவறப்பண்ணும் என நம்பப்படுகிறது.[2] 

பெரிய, வயதான உருவத்திலும், உடல் முழுவதும் முடி நிறைந்த தோற்றத்திலும் இவ்வுயிரினம் இருப்பதாகவும்,  அதன் தலையில் தீயிருக்கும் பானையைச் சுமந்து வருவதாகவும், அதன் நெற்றியில்  வலுவான, பிரகாசமான கண் உள்ளதாகவும் அசுரன் என அங்குள்ள மக்களால் நம்பப்படும் இது, இரவுநேரங்களில் பள்ளத்தாக்குகளில் உள்ள வீடுகளை தீ வைத்து கொளுத்தும் எனவும், மலையேறும் பயணிகளை, தீப்பானையை காட்டி ஏமாற்றி, வழியை மாற்றி இரவும் பகலும் பயணம் செய்ய வைத்து ஒருபோதும் அவர்கள் இலக்கை அடைய விடாதபடி தொந்தரவு செய்யும் எனவும் கதைகள் கூறப்படுகின்றன.[3]

மலையின் கீழிருக்கும்  குழந்தைகள் அடிக்கடி தங்கள் வீட்டின் ச னல்களுக்கு அருகில் உட்கார்ந்து, ஒளி எரியும் மற்றும் அணையும் தொலைதூர மலை முகடுகளைப்  பார்த்து, தங்கள் நண்பர்களிடம் "ராச்சோக்" தெரிவதாக விளையாடுவது அங்குள்ள வழக்கமாகும்.

ரண்டாஸ் சூனியக்காரி, அகர் பச்சின் எனப்படும் தொன்மப் பறவை இவைகளோடு, பிராம் பிராம் சவுக்கும் காஷ்மீரி பள்ளத்தாக்கு மக்களிடையே நம்பப்படும் புராண கதாபாத்திரமாகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. bramarācōkh
  2. "பிராம் பிராம் சௌக்: காஷ்மீரி நாட்டுப்புறக் கதையின் மர்மம்".
  3. bramaracok The Literary Heritage of Kashmir 1985 Mittal Publications
  4. "காஷ்மீரி புராண உயிரினங்கள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்ராசோக்&oldid=3880470" இலிருந்து மீள்விக்கப்பட்டது