பியூட்டனாயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூட்டனாயிக் அமிலத்தின் சமபகுதியங்கள்
குரோட்டோனிக் அமிலம்
ஐசோகுரோட்டோனிக் அமிலம்
3-பியூட்டனாயிக் அமிலம்

பியூட்டனாயிக் அமிலம் (Butenoic acid) என்பது C3H5COOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக C4H6O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இதை அடையாளப்படுத்தலாம். கட்டமைப்பில் கிளைக்காத 4 கார்பன் அணு சங்கிலியில் மூன்று ஒற்றைப்பிணைப்புகளும் ஓர் இரட்டைப் பிணைப்பும் கொண்டிருக்கும் மூன்று ஒற்றை கார்பாக்சிலிக் அமிலங்களில் ஒன்றைக் குறிக்கும். HO(O=)C–CH=CH–CH2–H (2-பியூட்டனாயிக்கு) அல்லது HO(O=)C–CH2–CH=CH–H (3-பியூட்டனாயிக்கு என்பவை இதர இரண்டு கட்டமைப்பு வாய்ப்பாடுகளாகும்.

இந்த சேர்மங்கள் தொழில்நுட்ப ரீதியாக ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்களாகும். இருப்பினும் சில வேதியியலாளர்கள் இவை மிகவும் குறுகியதாக இருப்பதால் அவற்றை விலக்கலாம் என்பார்கள். மூன்று சமபகுதியங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  • குரோட்டோனிக் அமிலம்
  • ஐசோகுரோடோனிக் அமிலம்
  • 3-பியூட்டனாயிக் அமிலம்[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. M. A. Casado-Rodriguez, M. Sanchez-Molina, A. Lucena-Serrano, C. Lucena-Serrano, B. Rodriguez-Gonalez, Manuel Algarra, Amelia Diaz, M. Valpuesta, J. M. Lopez-Romero, J. PerezJuste, and R. Contreras-Caceres (2016): "Synthesis of vinyl-terminated Au nanoprisms and nanooctahedra mediated by 3-butenoic acid: Direct Au@pNIPAM fabrication with improved SERS capabilities". Nanoscale, volume 2016, issue 8, pages 4557-4564. எஆசு:10.1039/C5NR08054A
  2. David B. Bigley and Michael J. Clarke (1982): "Studies in decarboxylation. Part 14. The gas-phase decarboxylation of but-3-enoic acid and the intermediacy of isocrotonic (cis-but-2-enoic) acid in its isomerisation to crotonic (trans-but-2-enoic) acid". Journal of the Chemical Society, Perkin Transactions 2, volume 2, issue 1, pages 1-6. எஆசு:10.1039/P29820000001
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூட்டனாயிக்_அமிலம்&oldid=3754488" இலிருந்து மீள்விக்கப்பட்டது