பின்புறத்தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிலாந்து நாட்டின் பின்புறத்தோட்ட மாதிரி

பின்புறத்தோட்டம் (back garden) என்பது வசிப்பிடத் தோட்டமாகும். ஒரு வீட்டின் முன்புறத் தோட்டத்திற்கு நேர்எதிராக பின்பக்கமுள்ளது, பின்புறத் தோட்டமாகும். புறநகர் பகுதிகளில் வாழ்ந்த ஆங்கிலேயர்களுக்கு இத்தோட்டக்கலை சிறப்புப் பண்பாடாக விளங்குகிறது.[1] ஒரு முக்கியமான கட்டிடம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்படும் பொழுது முன்புறத் தோட்டம், பின்புறத்தோட்டம் என வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர்களின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இத்தோட்டக்கலை சிறப்புற்று விளங்குகிறது. இருபதாம் நூற்றாண்டில் வீட்டின் முன் பகுதியில் உள்ள தோட்டம் சாலையை நோக்கி அமைத்தார்கள். பின்புற பகுதியென்பது ஒதுக்கப்பட்ட பகுதியாகவும், நடைபாதையாகவும் பயன்படுத்தப்பட்டது.

ஒரு வீடு மெத்தைவீடாக இருக்கும் பட்சத்தில் பக்கவாட்டில் பாதை இருக்க வாய்ப்பில்லை. பக்கவாட்டு பாதை இல்லாதபட்சத்தில் வீட்டின் வழியாகவே பின்புறத்தோட்டத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். ஒரு வீட்டின் முகப்பு சாலையை நோக்கி இருக்கும்போது முன்புறத்தோட்டம் இருக்க வாய்ப்பில்லை.பின்புறத்தில் சிறிதளவு இடமிருக்கும்.

இங்கிலாந்தின் வடதொழில் நகரங்களில் சிறிய வீடுகள் மற்றும் அருகருகே உள்ள வீடுகள் இருந்தன. அவைகள் இப்பொழுது அழிக்கப்பட்டுவிட்டன. முன்புறத்தோட்டமென்பது சாதாரண மற்றும் பொதுவானது. ஆகையால் மரபுத்தடைகள் மற்றும் விதிக்கு உட்பட்டதாகும். எது எப்படியோ, பின்புறத்தோட்டமென்பது தனித்துவம் மற்றும் அசாதாரணமானது. பின்புறத்தோட்டம் பல்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. S Chevalier (1998). "From woollen carpet to grass carpet: bridging house and garden in an English suburb". Material Cultures: Why Some Things Matter. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-226-52601-1. https://books.google.com/books?id=wtiXlOKW4qYC. "Every resident ... has a private garden divided into two areas, the front and the back garden whose social role is ..." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்புறத்தோட்டம்&oldid=2902509" இலிருந்து மீள்விக்கப்பட்டது