பின்குறிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்குறிப்பு (postscript) எனப்படுவது, ஒரு கடிதத்தின் முக்கிய பகுதி எழுதப்பட்டபிறகு சேர்க்கப்படுவதாகும். இது ஆங்கிலத்தில் PS அல்லது P. S. என்று சுருக்கி அழைக்கப்படும். தமிழில் பி.கு. என சுருக்கி அழைப்பர். post scriptum எனும் இலத்தீன் வார்த்தைக்கு 'பின்னர் எழுதப்பட்டது' என பொருள். post scriptum எனும் இலத்தீன் வார்த்தையிலிருந்து மருவி வந்தது, postscript எனும் ஆங்கில வார்த்தை. [1][2]

பின்குறிப்பு என்பது ஒரு வாக்கியமாகவோ, பத்தியாகவோ சில நேரங்களில் பத்திகளாகவோ இருக்கலாம்.

தமிழ் சிறுகதை இலக்கியத்தில், சில நேரங்களில் எழுத்தாளர்கள் 'பின்குறிப்பினை' நகைச்சுவையாகவும் புதுமையாகவும் பயன்படுத்துவர். பத்திரிகைகளில் எழுதப்படும் கட்டுரைகளிலும் இந்த நடை, புதுமையாக கடைபிடிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sullivan, Robert Joseph (1877). A dictionary of the English language. Original from Oxford University. பக். 509 and 317. http://books.google.com/books?id=d24CAAAAQAAJ&pg=PT37&dq=postscript+dictionary+post+scriptum+Latin#PPT37,M1. 
  2. Tanner, William Maddux (1922). Composition and Rhetoric. Original from the University of California: Ginn & Co. xxvii. http://books.google.com/books?id=ydREAAAAIAAJ&pg=RA1-PR27&dq=postscript+dictionary+post+scriptum+Latin. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்குறிப்பு&oldid=2745485" இருந்து மீள்விக்கப்பட்டது