பித்த அரிப்பு
Appearance
பித்த அரிப்பு | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | தோல் மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | L29.8 (ILDS L29.880) |
பித்த அரிப்பு (biliary pruritis) என்பது அடைப்பு வகை மஞ்சட் காமாலையில் (obstructive jaundice) உடலெங்கும் ஏற்படும் அரிப்பு ஆகும். இது எதனால் ஏற்படுகிறது என்பது துல்லியமாக அறியப்படவில்லை. பித்த உப்புகள் (bile salts) தோலில் படிவதால் உண்டாவதாக பெரும்பான்மையாக நம்பப்படுகிறது. உடலினுள் உண்டாக்கப்படும் ஓப்பிய வழிப்பெறுதிகளால் உண்டாவதாகச் சிலர் கூறுகின்றனர்.
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அன்று. ஓர் அறிகுறியே! பல காரணங்களால் இது ஏற்படலாம். அப்படிப்பட்ட காரணங்களுள் பித்தப்பாதை அடைப்பும் ஒன்று. பித்தப்பாதை அடைபடுவதால் பித்தம் குடலுக்குச் சென்று செரிமானத்திற்கு உதவ முடியாமல் போய் விடுகிறது. ஆகவே பித்தம் இரத்தத்தில் கலந்து விடுகிறது.