பாவெல் கார்லோவிச் சுடெர்ன்பர்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாவேல் கார்லோவிச் சுடெர்ன்பர்கு (Pavel Karlovich Shternberg) (உருசியம்: Павел Карлович Штернберг; ஏப்பிரல் 2, 1865 – பிப்ரவரி 1, 1920, ஓர் உருசிய வானியலாளரும் அலெக்சாந்தர் கெர்ன்சுகி அரசை நீக்கிட பங்களிப்பு செய்த புரட்சியாளரும் ஆவார். இவர் விளாதிமிர் இலெனின், இலியோன் டிராட்சுகி அகியோரின் நண்பராவர். இவரது வானியல் பங்களிப்புகள் கோள்களின் தலையாட்டங்களைக் கண்டறிந்ததும் சுடெர்ன்பர்கு வானியல் நிறுவனம் அமைந்த மாஸ்கோ வான்காணக அகலாங்கைத் தீர்மானித்ததும் ஆகும். இவர் ஒளிப்பட வானியலில் வல்லுனர் ஆவார். இவர் முதன்மையாக இரட்டை விண்மீன்களை ஒளிப்படம் பிடித்து பெயர்பெற்றவர்.

சுடெர்ன்பர்கு வானியல் நிறுவனமும் நிலாவின் சுடெர்ன்பர்கு குழிப்பள்ளமும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lunar Crater Statistics". lunar.arc.nasa.gov. பார்த்த நாள் 2008-10-11.