பால் சாபாட்டியர்
பால் சாபாட்டியர் Paul Sabatier | |
---|---|
பால் சாபாட்டியர் | |
பிறப்பு | கார்கேசோன்னெ,பிரான்சு | 5 நவம்பர் 1854
இறப்பு | 14 ஆகத்து 1941 தூலூசு, பிரான்சு | (அகவை 86)
தேசியம் | பிரெஞ்சு |
துறை | கனிம வேதியியல் |
பணியிடங்கள் | பிரான்சு டி கல்லூரி போர்டியாக்சு பல்கலைக் கழகம் தூலூசு பல்கலைக் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பிரான்சு டி கல்லூரி ஈகோல் நார்மேல் சுப்பீரியூர் |
ஆய்வு நெறியாளர் | மார்செலின் பெர்த்திலாட்டு[சான்று தேவை] |
அறியப்படுவது | பல்லின வினையூக்கிகள் வினை |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (1912) டேவி பதக்கம்(1915) ஆல்பர்டு பதக்கம் (ராயல் கழகம் (கலை) |
பால் சாபாட்டியர் (Paul Sabatier) என்பவர் 5 நவம்பர் 1854 முதல் 14 ஆகத்து 1941 வரையிலான காலத்தில் வாழ்ந்த பிரான்சு நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ஆவார். புகழ் பெற்ற ராயல் கழகம் [1], எடின்பர்க்கு ராயல் கழகம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான்சு நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள கார்காசோன்னி நகரில் இவர் பிறந்தார். 1912 ஆம் ஆண்டு விக்டர் கிரிக்னார்டு உடன் சேர்த்து இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தனியாகப் பிரித்தெடுக்கப்பட்ட உலோகங்களின் முன்னிலையில் கரிம சேர்மங்கள் ஐதரசனேற்ற வினையில் பங்கேற்பது தொடர்பான ஆராய்ச்சியில் பால் சாபாட்டியர் ஈடுபட்டார்.
கல்வி
[தொகு]பிரான்சிலுள்ள ஈகோல் நார்மேல் சுப்பீரியூர் அமைப்பில் 1874 ஆம் ஆண்டு முதல் இவர் கல்வி கற்கத் தொடங்கினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது வகுப்பில் முதலாவது தரநிலையுடன் பட்டம் பெற்றார்[2]. 1880 ஆம் ஆண்டில் பாரிசு நகரிலுள்ள டி பிரான்சு கல்லூரி இவருக்கு அறிவியல் முனைவர் பட்டத்தை வழங்கியது[2].
எதோவுவார்டு ஃபில்கோல் வேதியியல் பேராசியரைத் தொடர்ந்து 1883 ஆம் ஆண்டில் பால் சாபாட்டியர் அப்பதவிக்கு வந்தார். மேலும் மதபோதகரும் வேதியியலருமான யீன்-பாப்டிசுட்டு சென்டெரென்சுடன் ஒரு நீண்ட கால ஒத்துழைப்பைத் தரத் துவங்கினார், இத்தொடர்பினால் இவர்களின் ஆய்வுகள் வேறுபடுத்த முடியாததாக இருந்தன. இருவரும் கூட்டாக இணைந்து அறிவியல் அகாதெமிக்காக 34 ஆய்வுக்குறிப்புகளை வெளியிட்டனர். பிரஞ்சு வேதியியல் கழகத்திற்காக 11 வரலாற்றுக் குறிப்புகளையும், வேதியியல், இயற்பியல் வரலாறுகளின் வரிசைக்குறிப்பாக 2 இணை வரலாறுகளையும் வெளியிட்டனர் [3] Cox என்ற பொதுவாய்ப்பாடு கொண்ட சேர்மங்களை ஐதரசனேற்றம் மூலம் மீத்தேனாக்கல் வினையை 1902 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கண்டறிந்தனர் [4]. சாபாட்டியர்-சென்டெரென்சு செயல்முறையை கண்டறிந்ததற்காக 1905 ஆம் ஆண்டு இருவருக்கும் கூட்டாக அறிவியல் அகாதெமியின் யெக்கெர் பரிசு வழங்கப்பட்டது [3].
1905 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்டெரென்சும் சாபாட்டியரும் இணைந்து சில கூட்டுப் படைப்புகளை வெளியிட்டனர், இவர்களின் ஆய்வுகள் கூட்டாக இருந்ததால் தனிநபர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் இதற்கு காரணமாக இருக்கலாம் [3]. 1905 ஆம் ஆண்டில் சாபாட்டியர் துலூசு பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆசிரியாராக பணியில் சேருவதற்கு முன்பு வரை தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அறிவியல் பாடத்தை வகுப்புகளில் கற்றுக்கொடுப்பதில் கழித்தார்.
ஆய்வு
[தொகு]சாபாட்டியர் தனது ஆரம்பகாலத்தில் கந்தகம் மற்றும் உலோக சல்பேட்டுகளின் வெப்ப வேதியியல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவருடைய முனைவர் பட்டத்திற்கான பாடப்பொருளாகவும் இந்த ஆராய்ச்சி அமைந்தது. சல்பைடுகள், குளோரைடுகள், குரோமேட்டுகள், தாமிரத்தின் சேர்மங்கள் குறித்த இவருடைய ஆய்வுகள் தூலுசு பல்கலைக்கழகத்தில் பதவியேற்ற பின்னரும் தொடர்ந்தன. மேலும் இவர் நைட்ரசனின் ஆக்சைடுகள் மற்றும் நைட்ரோசோடைசல்போனிக் அமிலம் மற்றும் அதன் உப்புகள் ஆகியவற்றினையும் ஆய்வு செய்தார், பகிர்வு குணகம் மற்றும் ஈர்ப்பு நிறமாலை பற்றிய அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். சாபாட்டியரின் ஐதரசனேற்ற வினை தொழில்துறை பயன்பாட்டிற்கு பெரிதும் உதவியது. 1897 ஆம் ஆண்டில் அமெரிக்க வேதியியலாளரான யேம்சு பாய்சின் சமீபத்திய உயிர்வேதியியல் பணி கட்டமைக்கப்பட்டது. நிக்கல் (ஒரு வினையூக்கியாக) சுவடு அளவுக்கு இவ்வினையில் அறிமுகப்படுத்தப்படுவதனால் பெரும்பாலான கார்பன் சேர்மங்களின் மூலக்கூறுகளுக்கு ஐதரசன் கூடுதலாக சேர உதவுகிறது என்று இவர் கண்டுபிடித்தார்.
உயர் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஐதரசனைப் பயன்படுத்தி கார்போன் டை ஆக்சைடை ஒடுக்கம் செய்து மீத்தேன் உற்பத்தி செய்யும் செயல்முறையில் நிக்கலை வினையூக்கியாகப் பயன்படுத்துவது நிக்கலின் மற்றொரு பயன்பாடு ஆகும். இது சபாட்டியர் வினை என அழைக்கப்படுகிறது. மற்றும் பூமியில் இருந்து தண்ணீர் பெற்று பயன்படுத்துவதை விடுத்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் தேவையான நீரை உற்பத்தி செய்து கொள்ளவும் இது பயன்படுத்தப்படுகிறது.[5]
- ∆H = −165.0 கிலோ யூல்/மோல்
- (வினையைத் தொடங்க சிறிதளவு தொடக்க ஆற்றல் இங்கு அவசியம்)
1912 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சபாத்திர் செயல்முறை மற்றும் லா லா கேடலியேஜ் en சிமி ஆர்கோனிக் (கரிம வேதியியலில் புத்துயிர்) போன்ற அவருடைய படைப்புகள் வெளியிடப்பட்டன. 1912 ஆம் ஆண்டில் சக பிரஞ்சுக்காரரான விக்டர் க்ரிக்னார்டுடன் இணைந்து வேதியியல் நோபல் பரிசு பெற்றார். [2] அவர் வினையூக்கின் சபாடிர் கோட்பாட்டிற்கும் அறியப்படுகிறார். சாபாட்டியர் செயல்முறை வினைக்காகவும் கரிம வேதியியல் வினையூக்கியின் பயன்பாட்டிற்காகவும் சாபாட்டியர் நன்கு அறியப்படுகிறார். 1912 ஆம் ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசை பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த விக்டர் கிரிக்னார்டுடன் இவர் பகிர்ந்து கொண்டார் [2]. வினையூக்க வினைகளில் சாபாட்டியர் கொள்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.
சொந்த வாழ்க்கை
[தொகு]சாபாட்டியருக்கு நான்கு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் இத்தாலிய வேதியியலாளர் எமிலோ பொமிலியோவை மணந்தார்[2]. இவர் நினைவாக தூலூசு பல்கலைக்கழகம் சாபாட்டியர் பல்கலைக் கழகம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கணித வல்லுநர் தாமசு யோவான்சு சிடியில்ட்சுடன் இணைந்து தூலூசு அறிவியல் அமைப்பை இவர் நிறுவினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Eric Rideal (1942). "Paul Sabatier. 1859-1941". Obituary Notices of Fellows of the Royal Society 4 (11): 63–66. doi:10.1098/rsbm.1942.0006.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Paul Sabatier - Biography". The Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2013-12-07.
- ↑ 3.0 3.1 3.2 Alcouffe 2006, ப. 10.
- ↑ Rönsch et al. 2016.
- ↑ Administrator, NASA Content (2015-08-17). "The Sabatier System: Producing Water on the Space Station" (in en). NASA. https://www.nasa.gov/mission_pages/station/research/news/sabatier.html.
உசாத்துணை
[தொகு]- Alcouffe, Alain (December 2006), La loi de 1905 et l’université de Toulouse ou la La laïcité au bon sens du terme (in பிரெஞ்சு), Iesr – Toulouse, பார்க்கப்பட்ட நாள் 2017-07-26
- Rönsch, Stefan; Schneider, Jens; Matthischke, Steffi; Schlüter, Michael; Götz, Manuel; Lefebvre, Jonathan; Prabhakaran, Praseeth; Bajohr, Siegfried (2016-02-15), "Review on methanation – From fundamentals to current projects", Fuel, 166: 276–296, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/j.fuel.2015.10.111
புற இணைப்புகள்
[தொகு]- "Paul Sabatier (to 150th anniversary of his birthday)". Russian Journal of Applied Chemistry 77 (11): 1909–1912. 2004. doi:10.1007/s11167-005-0190-6.
- Rideal, E. K. (1951). "Presidential address. Concepts in catalysis. The contributions of Paul Sabatier and of Max Bodenstein". Journal of the Chemical Society (Resumed): 1640–1647. doi:10.1039/JR9510001640.
- Taylor, H. (1944). "Paul Sabatier 1854–1941". Journal of the American Chemical Society 66 (10): 1615–1617. doi:10.1021/ja01238a600.
- Nobel Lecture The Method of Direct Hydrogenation by Catalysis from Nobelprize.org website