உள்ளடக்கத்துக்குச் செல்

பால்மோரல் தொப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு நவீன பால்மோரல் தொப்பி.

இசுக்கொட்டிய மொழியில் பால்மோரல் பொனட் (Balmoral bonnet) என்று அழைக்கப்படும் பால்மோரல் தொப்பி இசுக்கொட்டியப் பாரம்பரியத் தொப்பி ஆகும். இது முறை சார்ந்ததும், முறை சாராததுமான உயர்நிலப் பகுதி உடைகளுடன் அணியத்தக்கது. 16 ஆம் நூற்றாண்டில் இருந்தாவது புழக்கத்தில் இருந்துவரும் இத் தொப்பி, மென்மையான கம்பளியினால் பின்னப்படுவது. இதன் உச்சி தட்டையாக இருக்கும். இசுக்கொட்லாந்தின் அரச குடும்ப வதிவிடமான பால்மோரல் கோட்டைமனையின் பெயரைத் தழுவியே இத் தொப்பிக்குப் பெயர் ஏற்பட்டது. இது, இதே போன்ற, முறைசாரா வகையைச் சார்ந்த டாம் ஓ சான்டர்; முறைசார்ந்ததும், முறைசாராததுமான தேவைகளுக்குப் பயன்படக்கூடிய கிளென்காரி பொனெட் ஆகிய தொப்பிகளுக்கு மாற்றாகப் பயன்படக்கூடியது.

வடிவமைப்பு

[தொகு]

முன்னர் இத் தொப்பியின் மேற்பகுதி மிகவும் பெரிதாக இருந்தது. இப்பொழுது சிறிதாக உள்ளது. மென்மையான துணியால் ஆன இத் தொப்பி கடும் நீலம், கறுப்பு, பச்சை ஆகிய நிறங்களிலேயே பெரிதும் காணப்படுகிறது. தொப்பியின் கீழ் விளிம்போரம் காணப்படும் துணிப் பட்டை ஒன்றுடன் இணைந்ததாகத் தொப்பியின் பின்புறம் நாடா ஒன்று இருக்கும். இது சில சமயங்களில் பின்புறத்திலிருந்து தொங்கியவாறு காணப்படும். முன்னர் இந்த நாடா தொப்பியைத் தலையோடு இறுகக் கட்டுவதற்குப் பயன்பட்டதாகத் தெரிகிறது. தொப்பியின் இடது புறத்தில் படைத்துறை சார்ந்த அல்லது இனக்குழு சார்ந்த சின்னம் பொருத்தப்படுவது உண்டு.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்மோரல்_தொப்பி&oldid=1362400" இலிருந்து மீள்விக்கப்பட்டது