பாலின்பக் கலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலின்பக் கலைகள் என்பது பாலுணர்வை தூண்டும் கலையம்சம் கொண்ட கலைகளைக் குறிக்கிறது. ஓவியம், இலக்கியம், ஒளிப்படம், திரைப்படம் என எல்லா கலைவடிவங்களிலேயும் பாலின்பம் வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் இவை பாலுணர்வுக் கிளர்ச்சியை உண்டு பண்ணும் வணிகப் படைப்புகள் அல்ல. பொதுவாக இவை பாலுணர்வுக் கிளர்சிக்காக உணர்ச்சி நோக்கில் செய்யாமல் பாலுணர்வை கலை வடிவில் புரிந்து கொள்ளும்படியாக வெளிப்படுத்துபவை ஆகும். இந்து மதக் கோயிலின் நிர்வாண உடலுறவுச் சிற்பங்கள் பாலின்பக் கலைகளுக்கான ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலின்பக்_கலைகள்&oldid=3193065" இலிருந்து மீள்விக்கப்பட்டது