பாலகிருஷ்ண சர்மா நவீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலகிருஷ்ண சர்மா நவீன் சிறந்த இந்தி மொழிக்கவிஞரும், பேச்சாளரும் எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். 1897 இல் மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாப்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார். அங்கு சரியான கல்வி வசதி இல்லாததால் ஷாஜாப்பூர், உஜ்ஜைன், கான்பூரில் கல்வி பயின்ற இவர் கவிதை, உரைநடை இரண்டிலும் ஆர்வமும் திறனும் கொண்டவர். கணேஷ் சங்கர் வித்யார்த்தி என்பவர் நடத்திவந்த பிரதாப் என்ற இதழில் பணிபுரிந்தார். வித்யார்த்தியின் மறைவுக்குப் பின பல ஆண்டுகள் அவ்விதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். இவர் முதல் எழுத்துப்பணி சந்த் என்ற கதையுடன் தொடங்கியது. பிறகு கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர் பிரபா என்ற இதழையும் தொடங்கினார். தனது கல்லூரிக் கல்வியை கான்பூரிலுள்ள கிறைஸ்ட் சர்ச் கல்லூரியில் தொடங்கிய இவர் அதனை பாதியில் விட்டு 1920 இல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார்.[1]

மேற்கோள்[தொகு]

  1. தி இந்து , டிசம்பர் 8, 2015. பார்த்த நாள் 13.12.2015