பாலகிருசணன் ஆகோட்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலகிருசுணன் அகோட்கர்
Balkrishan Akotkar
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு1 சூலை 1937 (1937-07-01) (அகவை 86)
விளையாட்டு
விளையாட்டுநீண்ட தொலைவு ஓட்டம்
நிகழ்வு(கள்)மாரத்தான்

பாலகிருசுணன் ஆகோட்கர் [1] (Balkrishan Akotkar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீரராவார். 1937 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களீல் இவர் இந்தியாவிற்காக ஓடுகிறார். [2] 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டியில் பாலகிருசுணன் பங்கேற்றார்.

1964 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டியில் 33 ஆவது இடத்தில் இருந்தார். [3] விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, எதிர்கால விளையாட்டு வீரர்களின் வளர்ச்சியில் இவர் ஒரு நினைவுச்சின்னமாக இருந்து வருகிறார். தேசிய உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளில் மகாராட்டிரா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதற்கான குழுவிற்கு இவர் தலைமை தாங்கினார் [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Akotkar BALAKRISHNA". பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
  2. "Balkrishan Akotkar". பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
  3. Williams, Joe (21 June 2012). "Olympics memories: It was the first time I flew in a plane, says Balkrishna Akotkar" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
  4. Staff (15 January 2008). "Federation Cup National Cross Country meet in Nagpur from Feb 2" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகிருசணன்_ஆகோட்கர்&oldid=3832689" இலிருந்து மீள்விக்கப்பட்டது