பாறப்புறத்து
கே. இ. மத்தாயி (பாறப்புறத்து) | |
---|---|
தொழில் | நாவல் எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர் |
தேசியம் | இந்தியா |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அர நாழிக நேரம், ஆகாசத்திலெ பறவகள், நிணமணிஞ்ஞ கால்பாடுகள், அன்வேஷிச்சு; கண்டெத்தியில்ல, பணிதீராத்த வீடு |
பாறப்புறத்து என்னும் புனைபெயர் கொண்ட கெ. ஈசோ மத்தாயி (நவம்பர் 14, 1924-டிசம்பர் 30, 1981) மலையாள சிறுகதை, நாவல் எழுத்தாளர் ஆவார். இருமுறை கேரள அரசின் இலக்கிய அமைப்பின் விருதினைப் பெற்றுள்ளார். இவரின் கதைகள் பல திரைப்படங்களாக வெளியாகியுள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மாவேலிக்கர வட்டத்தில் குன்னம் என்னும் ஊரில் 1924 நவம்பர் 14-ந் குஞ்ஞுநைனா ஈசோ, சோசாம்மை ஆகியோரின் மகனாகப் பிறந்தார். குன்னம் சி.எம்.எஸ். எல்.பி. ஸ்கூள், கவர்ன்மென்ட் மிடில் ஸ்கூள், செட்டிகுளங்ஙர ஹைஸ்கூள் ஆகிய இடங்களில் கல்வி கற்றார். 1944-ல் தன் 19-ஆம் வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். நாடகங்கள் எழுதியிருந்து, மத்தாயி இருபத்தியோரு ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றினார். 1965-ல் இலக்கியக் கழகங்களில் துணைத் தலைவர், தலைவர் பதவிகள் வகித்தார். 1981 டிசம்பர் 31 ஆம் நாள் இறந்தார்.
ஆக்கங்கள்
[தொகு]சிறுகதைகள்
[தொகு]- பிரகாசதார (1952)
- ஒரம்மயும் மூன்னு பெண்மக்களும் (1956)
- குருக்கன் கீவறீத் மரிச்சு (1957)
- ஆ பூமொட்டு விரிஞ்ஞில்ல (1957)
- தோக்கும் தூலிகயும் (1959)
- தினாந்த்யக்குறிப்புகள் (1960)
- ஜீவிதத்தின்றெ ஆல்பத்தில்நின்னு (1962)
- நாலாள் நாலுவழி (1965)
- சூசுன்ன (1968)
- தெரஞ்ஞெடுத்த கதகள் (1968)
- கொச்சேச்சியுடெ கல்யாணம் (1969)
- அளியன் (1974)
- வழியறியாதெ (1980)
- கீழடங்ஙல் (1982)
புதினங்கள்
[தொகு]- நிணமணிஞ்ஞ கால்பாடுகள் (1955)
- அன்வேஷிச்சு; கண்டெத்தியில்ல (1958)
- ஆத்யகிரணங்ஙள் (1961)
- மகனே, நினக்குவேண்டி (1962)
- பணிதீராத்த வீடு (1964)
- ஓமன (1965)
- தேன் வரிக்க (1966)
- அரநாழிக நேரம் - (1967)
- வெளிச்சம் குறஞ்ஞ வழிகள் (1968)
- சந்த (1969)
- பிரயாணம் (1970)
- நன்மயுடெ பூக்கள் (1972)
- வழியம்பலம் (972)
- அச்சன்றெ காமுகி (1975)
- தர்மசங்கடம் (1975)
- அவஸ்தாந்தரம் (1976)
- மனசுகொண்டு ஒரு மடக்கயாத்ர (1976)
- ஆகாசத்திலெ பறவகள் (1979)
- இவனெ ஞான் அறியுன்னில்ல (1979)
- காணாப்பொன்ன் (1982)
விருதுகள்
[தொகு]சிறுகதை, புதினம் ஆகியவற்றிற்காக பல்வேறு பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். 1966-ல் நாலாள் நாலுவழி[1] என்ற சிறுகதைக்கும், 1971-ல் அரநாழிகநேரம் [2] என்ற புதினத்திற்கும் விருதுகள் பெற்றார்.
சான்றுகள்
[தொகு]- ↑ "கேரள சாகித்ய அக்காதமி சிறுகதை விருது பெறுவோர்". கேரள சாகித்ய அக்காதமி. பார்க்கப்பட்ட நாள் மேய் 15, 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "கேரள சாகித்ய அக்காதமி நோவல் விருது பெற்றோர்". கேரள சாகித்ய அக்காதமி. பார்க்கப்பட்ட நாள் மேய் 15, 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]