பார்வை மோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்வை மோகம் (voyeurism - வாயூரிஸம்), ஆண்களில் சிலருக்கு பாலியல் இச்சையைத் தூண்டக்கூடிய ஒரு வகை உளவியல் நோய்க்கூறு ஆகும். ஒரு பெண் உடை மாற்றும்போதோ அல்லது பாலுறவில் இருக்கும்போதோ அவரை இரகசியமாகக் கண்காணித்து அதன்மூலம் இன்புறுதலே பார்வை மோகம் என்பர்.[1] பார்வை மோகத்துடன் செயல்படுவது தண்டணைக்குரிய குற்றமாகும்.[2]

பார்வை மோகச் செயலுக்கான இந்தியத் தண்டம் சட்டம்[தொகு]

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 சி-யின் படி, பார்வை மோகச் செயலில் முதன் முறையாக ஈடுபட்டவர்களுக்கு தண்டத்தொகை மற்றும் ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் சிறை தண்டனையும், இரண்டாம் முறையாக அதே குற்றத்தில் ஈடுபடுவர்களுக்கு தண்டத் தொகையுடன், மூன்றாண்டு முதல் ஏழாண்டு வரை சிறை தண்டனையும் உண்டு. இத்தண்டனைக்குரிய சட்டம் பிற பாலினத்தவர்களுக்கும் பொருந்தும்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Duhaime's Law Dictionary". 2017-06-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-01-10 அன்று பார்க்கப்பட்டது.
  2. Voyeurism as a Criminal Offence
  3. IPC 354C
  4. "Section 354C of the Indian Penal Code". 2018-07-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-01-10 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வை_மோகம்&oldid=3562856" இருந்து மீள்விக்கப்பட்டது