பார்வதி நாயர் (கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பார்வதி நாயர்
Parvathi-nayar.jpg
பிறப்புமார்ச்சு 24, 1964 (1964-03-24) (அகவை 56)
தேசியம்இந்தியர்
கல்விலண்டன் கலைப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநவீனக் கலை, ஓவியம், கானொளி
குறிப்பிடத்தக்க படைப்புகள்A Story of Flight, Jai He public art project, T2 Terminal Mumbai Airport The Fluidity of Horizons Kochi Muziris Biennale 2014/15
வலைத்தளம்
www.parvathinayar.com

பார்வதி நாயர் (Parvathi Nayar) என்பவர் தில்லியில் பிறந்த ஒரு கவின் கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவரது படைப்புகளான, சிற்பங்கள், ஓவியங்கள், புத்தகத் தொகுப்பு மற்றும் ஒளிப்படக் கலை ஆகியவற்றிற்காக நன்கு அறியப்பட்டவர். அமிதாப் பச்சனின் 70 வது பிறந்த நாள் விழாவான பி.70 இல் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட 70 கலைஞர்களில் இவரும் ஒருவர்.[1] அவரது படைப்புகளில் ஒன்றான, 20 அடி உயர சிற்பக் கலைப்படைப்பு, புதிய மும்பை வானூர்தி நிலையத்தில் 2014 ஆம் ஆண்டு அதன் தொடக்க தின விழாவில் நிறுவப்பட்டது. மேலும் சிங்கப்பூர் கலை அருங்காட்சியகம், சொத்பிஸ்பி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்ட், தி அவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் மற்றும் டச்செக் வங்கி போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களிலும் இவரது கலைப் படைப்புகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அவரது ஓவியங்களில் ஒன்று ஏபிஎன் அம்ரோவின் தில்சி பிளாட்டினம் அட்டையில் இடம்பெற்றுள்ளது.[2][3][4][5]

கல்வி[தொகு]

பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இருந்து ஒரு செவெனிங் ஸ்காலர்ஷிப்புடன் சென்ட்ரல் செயிண்ட் மார்டின் கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரி, லண்டனில் 2004 ஆம் ஆண்டு கவின் கலையில் முதுகலைப் படிப்பு. சென்னை பல்கலைக்கழகத்தின் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 1985 ஆம் ஆண்டு கவின் கலை (வேறுபாடு) இளங்கலை பட்டம். இவர் பல்கலைக்கழக அளவில் முதலிடமும் கவின் கலைத் துறையின் சிறந்த வெளி செல்லும் மாணவி என்ற சிறப்பும் பெற்றார். சென்னையில் குட் ஷெப்பர்ட் கான்வென்டில் மெட்ரிகுலேஷன் தேர்விலும் (தமிழ்நாட்டில் மாநில அளவில் இரண்டாம் இடம்) & 12 ஆம் வகுப்பிலும் மாநில அளவில் சிறப்புப் பெற்றார்.[3]

படைப்புகள்[தொகு]

பார்வதியின் படைப்புகள் உறவுகளின் விவரிப்புகளை ஆய்வு செய்வதாக உள்ளன, உதாரணமாக உள் / நெருக்க இடைவெளிகள், மற்றும் வெளியே / பொது போன்றவையாகவும், மேலும் இவரது படைப்புகள் வழியாக தெரியும் முப்பட்டக காட்சிகளில் சமூகம், அரசியல், கலாச்சார மற்றும் வரலாற்றின் நிறப்பிரிகையைக் காணமுடிகிறது. பார்வதி தன் படைப்புகளில் நுண்ணோக்கி கூறுகளைக் கொண்டுவந்து படைப்புகளில் அவற்றைத் தொகுக்கும் விதத்தில் கொண்டுவந்துள்ளார் அதன் வழியாக உலகத்தை விளக்கவும், உலகை ஆராயவும் பெரும்பாலும் அறிவியலைப் பயன்படுத்துகிறார்.[6][7]

 • ஜெய் ஜி பப்ளிக் ஆர்ட் திட்டம் என்ற அவரது 20-அடி உயர சிற்ப கலைப்படைப்பு பொது கலை திட்டமான ஜெய் ஹீயின் ஒரு பகுதியாக 2014 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட புதிய மும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்டது.[8]
 • தி சீட்ஸ் ஆஃப் தி திங்ஸ் / தி நேச்சர்ஸ் ஆஃப் தி திங்ஸ் என்ற கையால் வரையப்பட்ட அவரது கரிக்கோல் ஓவியம் தி விட்ஸ் தி விட்ஸ் (90 x 63 x 2 அங்குலம்) மற்றும் அதன் துணை காணொளி தி நேச்சர் ஆஃப் திங்ஸ் (கால அளவு 6 நிமிடங்கள், 34 வினாடிகள்) ஆகியவை சென்னை லலித் கலா அகாதமியில் நடைபெற்ற டாக்டர் சையத்யா சாம்ரான்னியின் நிகழ்ச்சிக்காக 2012 இல் காட்சிப்படுத்தப்பட்டு அனைவரையும் கவர்ந்தது.
 • 2014 மார்ச் மாதம் தி அம்பிகுய்னி ஆப் லேண்ட்ஸ்கோப்ஸ் என்ற பெயரில் சென்னையில் நடந்த கண்காட்சியில், நுண்ணொக்கிக் கூறுகளை லேண்ட்ஸ்கேப்பில் கொண்டுவந்து அவற்றைத் தொகுத்திருக்கும் யுக்தி கொண்ட கலைப்படைப்புகளும், அதேசமயம் அகண்ட பரப்புகளை பறவைப் பார்வையில் வானூர்தியில் இருந்தோ, செயற்கைக் கோளில் இருந்தோ காண்பதுபோல சுருக்கியதாக தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற மாநகரங்களின் அமைப்புகளைத் தந்து கிராபிட்டி வேலையில் வரைந்திருக்கும்விதம் மாநகரங்களில் உள்ள இறுக்க நிலையைக் காட்டுவதாக உள்ளது. மேலும் இதில் பார்வதி நாயரின் படைப்புகளோடு அதன் விளக்கங்களும் அழுத்தமாக கூறப்பட்டிருந்தன.[9]

தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காட்சிகளின் பட்டியல்[தொகு]

ஆண்டு தலைப்பு
தனி
2014 “தி அம்பிகுய்னி ஆப் லேண்ட்ஸ்கோப்ஸ்” இந்தியா, சென்னையின், அன்னபூரணா கரிமேளா, கேளரி வேதா
2008 “ஐ சிங் பாடி எலக்டிக்”, இந்தியா, மும்பையில் உள்ள பாம்பே ஆர்ட் கேளரி
2007 “வெற்றி தோல்வி சமன்”, சிங்கப்பூரின் ஆர்ட்சிங்கப்பூர்
2006 “இன்னர்ஸ்கிரா்பர்ஸ்”, சிங்கப்பூரில் கரோலின் பானர்ஜியால் நடத்தப்பட்ட, சாங் ஆஃப் இந்தியா.
2006 “வரைதல் ஒரு வினை: ஒரு நிறுவல்”, சிங்கப்பூர் பேன் மிங் யென், தி ஆர்ட்ஸ் ஹவுஸ்,
1998 "பயணம்", கிளாரா, ஜகார்த்தா, இந்தோனேசியா
1997 "மலர்கள், முகங்கள், உணர்வுகள்", ஜகார்த்தா, இந்தோனேசியா
1996 "ஒரு பெண்ணின் கலை", தி கோய் கேளரி, ஜகார்த்தா, இந்தோனேசியா
1994 வுமன் அண்ட் தி எலெக்ட்மெண்ட்ஸ்", டெமேசெக் பாலிடெக்னிக், சிங்கப்பூர்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Parvathy’s Master strokes". Chennai live news. பார்த்த நாள் 2016-10-07.
 2. "Infinite canvas". The Hindu. பார்த்த நாள் 2016-10-07.
 3. 3.0 3.1 "A life offered to art". New Indian Express. பார்த்த நாள் 2016-10-07.
 4. "Celebrating Amitabh Bachchan on canvas". DNA India. பார்த்த நாள் 2016-10-07.
 5. "India’s largest public art project lands at Mumbai airport". Artradarjournal. பார்த்த நாள் 2016-10-07.
 6. "The math of art". The Hindu. பார்த்த நாள் 2016-10-07.
 7. "Parvathi Nayar’s art with a social agenda". The Arts Trust. பார்த்த நாள் 2016-10-07.
 8. "T2 Mumbai: A grand museum that shows ‘what Indian art is all about’". The Hindu Business Line. பார்த்த நாள் 2016-10-07.
 9. "உண்மைகள் மீதான கட்டுமானங்கள் சிதைந்துவிட்ட அதீதப் புனைவின் நிலக்காட்சி". கட்டுரை. yaavarum.com (2014 மார்ச் 25). பார்த்த நாள் 11 ஏப்ரல் 2018.