பார்வதி அருண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்வதி அருண்
பிறப்புதிருவனந்தபுரம், கேரளா, இந்தியா
மற்ற பெயர்கள்நிதி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2017–முதல்

பார்வதி அருண் (Parvathy Arun) என்பவர் நித்தி அருண் என்ற இவரது மேடைப் பெயரால் அறியப்படுபவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார்.[1]

தொழில்[தொகு]

இவர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் அருண் மற்றும் மஞ்சு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பள்ளிப்படிப்பை சாந்திநிகேதன் பள்ளியில் பயின்றார். செம்பராத்திப்பூ (2017) மூலம் இணையான பெண் கதாநாயகியாக இவர் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் தனது இரண்டாவது படமான என்னாலும் சரத் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.(2018)[2] கீதா (2019) மூலம் தனது கன்னட அறிமுகத்தில் மூன்று முக்கியமான பெண் கதாபாத்திரங்களில் ஒன்றாக நடித்தார்.[3] பின்னர் இவர் தெலுங்கில் அறிமுகமான மௌனமே இஷ்டம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். களிகூட்டுகார் மற்றும் இருப்பதியோனாம் நோட்டாண்டு ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் மலையாளத்திற்குத் திரும்பினார். தமிழில் வெற்றிக்கு ஜோடியாக மெமரிஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.[4] இவரது இன்னொரு வெளிவராத படம் கன்னட படமான லங்காசுரா.[5]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புகள் Ref.
2017 செம்பரத்திப்பூ நீனா ஜேக்கப் மலையாளம் மலையாள அறிமுகம்
2018 என்னாலும் சரத். . ? எலிசபெத்
2019 கீதா கீதாஞ்சலி கன்னடம் கன்னட அறிமுகம் [6] [7]
மௌனமே இஷ்டம் தெலுங்கு தெலுங்கு அறிமுகம்
கலிக்கூட்டுகார் அஞ்சலி மலையாளம் [8]
இருப்பதியோன்னாம் நோட்டாண்டு மெரின்
2020 சேராதுகள் ட்ரீசா பிரிவு : சாமூஹ்ய பாதம் [9]
2022 காரி மீனா தமிழ் தமிழ் அறிமுகம் [10]
அறிவிக்கப்படும் மெமரிசு தமிழ் [11]
அறிவிக்கப்படும் இலங்காசூரா கன்னடம் [12]

மேற்கோள்கள்[தொகு]

  1. "പാർവതി അരുണിന്റെ ഗ്ലാമർ ഫോട്ടോഷൂട്ട് വിഡിയോ". Malayala Manorama (in மலையாளம்). 10 June 2021.
  2. "A precious move". Deccan Chronicle.
  3. "Parvathy Arun talks about making her debut with Geetha". The Times of India.
  4. "Vetri is a murder accused whose memories go missing in his next". The Times of India.
  5. "Vinod Prabhakar and Parvathy Arun team up for a film". The Times of India.
  6. "Parvathy Arun, first heroine to join Ganesh's Geetha". cinemaexpress.
  7. "Parvathy Arun, first heroine to join team Geetha". The New Indian Express.
  8. "Parvathy is all hopeful". Deccan Chronicle.
  9. "Mollywood gears up for yet another anthology titled Cheraathukal". OnManorama.
  10. KAARI - Official Trailer| Sasikumar | D. Imman | Hemanth (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 7 July 2022
  11. "Vetri's thriller has been titled Memories". The Times of India.
  12. "Vinod Prabhakar to play an underworld don in his next week". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி_அருண்&oldid=3672303" இலிருந்து மீள்விக்கப்பட்டது