பார்பரா எலைன் ரூத் பிரவுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்பரா எலைன் ரூத் பிரவுன்
Barbara Elaine Ruth Brown
பிறப்பு14 பிப்ரவரி 1929
சிக்காகோ
இறப்பு7 சனவரி 2019
படித்த கல்வி நிறுவனங்கள்விசுகான்சின் பல்கலைக்கழகம்
பணிவிலங்கியல், பறவையியல் நிபுணர்
பணியகம்இயற்கை வரலாற்று கள அருங்காட்சியகம்

பார்பரா எலைன் ரூத் பிரவுன் (Barbara Elaine Ruth Brown) என்பவர் ஓர் அமெரிக்க உயிரியலாளர் மற்றும் மக்கள் சேவகர் ஆவார்.

தொடக்க காலம்[தொகு]

பார்பரா உருசலுக்கு இவர் 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் சிக்காக்கோவில் பிறந்தார். பிரவுனின் பெற்றோர் ருமேனியா மற்றும் உருசியாவிலிருந்து குடியேறிய யூதர்களாவர். [1]விசுகான்சின் பல்கலைக்கழகத்தில் ரூத் பிரவுன் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். [1][2] 1953 இல், ரோசர் பிரவுனை மணந்து கொண்ட பிரவுனுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். [1]

தொழில்[தொகு]

47 ஆண்டுகளாக அமெரிக்க மாநிலமான இல்லினொய்சிலுள்ள சிகாகோ நகரத்தின் இயற்கை வரலாற்று கள அருங்காட்சியகத்தில் பணியாற்றினார். பிரவுனின் வாழ்க்கை விலங்கியல் நிபுணர் பிலிப் எர்சு கோவிட்சின் உதவியாளராகத் தொடங்கியது. [2] இவரது கள ஆராய்ச்சியில் செர்ராதோ சவானா மற்றும் பிரேசிலின் அட்லாண்டிக் கடலோர வனப்பகுதிக்கான பயணங்களும் அடங்கும். [2]. ரூத் பிரவுன் ஒரு திறமையான விலங்கு சேகரிப்பாளராகவும் மாதிரிகள் தயாரிப்பது மற்றும் பொறிகளை அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவராகவும் இருந்தார். [2]

பெயர்கள்[தொகு]

பார்பரா பிரவுனின் வனப்பகுதியின் வீச்சு
பார்பரா பிரவுனின் தூரிகை-வால் எலி உள்ளிட்ட சில இனங்கள்

பிரவுனின் பெயரில் 4 புதிய இனங்கள் உள்ளன. [3][1] அவை பின்வருமாறு: •ஐசோத்ரிக்சு பார்பராபிரவுனே - பார்பரா பிரவுனின் தூரிகை-வால் எலி [4][5] •காலிசுபசு பார்பராபிரவுனே - பார்பரா பிரவுனின் வனப்பகுதி [5] [ •அப்போமிசு பிரவுனோரம் - மவுண்ட் தபுலாவ் வன சுண்டெலி [2] •வடராவிசு பிரவுனே - ஒரு புதைபடிவ பறவை [2]

சேவை[தொகு]

தனது கணவர் ரோசர் பிரவுனுடன், இவர் கள அருங்காட்சியகம், மினசோட்டாவின் அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் சிகாகோ தாவரவியல் பூங்கா ஆகியவற்றை ஆதரித்தார். [3] இந்தப் பணியில் மினசோட்டாவின் புதிய பறவையியல் துறையின் அறிவியல் அருங்காட்சியகத்தை இயக்கும் புதிய பதவி - பறவையியல் துறையின் பார்பரா பிரவுன் நாற்காலி ஆகியவற்றை உள்ளடக்கியது.ஆகும். [6]

ரூத் பிரவுன் 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் நாள் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]