பாய் மோகன் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாய் மோகன் சிங்(Bhai Mohan Singh: டிசம்பர் 30, 1917 )இந்திய மருந்தியல் தொழில் முன்னோடி என அழைக்கப்படுபவர். மிகப்பெரிய மருந்து நிறுவனமான ரான்பாக்ஸி லேபரட்டரீஸ் லிமிடெட் நிறுவனர் ஆவார்.

இளமை[தொகு]

பாய் மோகன் சிங் ராவல்பிண்டி மாவட்டத்தில் டிசம்பர் 30, 1917 அன்று பிறந்தார். அவரது தந்தை பாய் கியான் சந்த் ஒரு இந்து.அவரது தாயார் சுந்தர் டாய் ஒரு சீக்கியர். பாய் மோகன் சிங் இரண்டாம் உலக போரின் போது, கட்டுமான தொழிலில் தனது வணிகத் தொழிலை தொடங்கினார். அவரது நிறுவனம் வட கிழக்கு மாநிலங்களில் சாலைகள் அமைக்க ஒரு ஒப்பந்தம் பெற்றது. ஆனால் விடுதலைக்குப் பின்னான இந்தியப் பிரிவினைக்கு பிறகு, அவர் ராவல்பிண்டியை விட்டு விட்டு புது தில்லிக்குக் குடியேறினார்.

பணி[தொகு]

பாய் மோகன் சிங் முதலில் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அச்சமயத்தில் அவரது உறவினர்களான ரஞ்சித் சிங் மற்றும் குருபாக்ஸ் சிங் என்பவர்களால் ரான்பாக்ஸி என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இதில் ரஞ்சித் சிங் என்ற பெயரிலுள்ள ரான் என்பதும் குர்பாக்ஸ் என்பதில் உள்ள பாக்சும் இணைந்து ரான்பாக்சியானது. இந்நிறுவனம் ஜப்பானிய மருந்து நிறுவனமான ஏ.சியோனோகி என்ற நிறுவனத்தின் தயரிப்புகளான வைட்டமின் மாத்திரைகள் மற்ரும் காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் விற்பனையாளராக இருந்தது.

காப்புரிமை[தொகு]

ரான்பாக்ஸி நிறுவனம் கடனில் தத்தளித்த போது ஆகஸ்ட் 1, 1952 இல் ரூ 2.5 லட்சம் கொடுத்து பாய் மோகன் சிங் இந்த நிறுவனத்தை வாங்கினார். பின்னர் லேபிடிட் ஸ்பா (Lapetit spa) என்ற இத்தாலிய மருந்து நிறுவனத்துடன் இணைந்தார். பின்னர் அதனையும் வாங்கினார். 1960 களில் ரான்பாக்ஸி நிறுவனம் காம்போஸ் மாத்திரைகளைத் தயாரிக்க ஆரம்பித்த போது மருந்தியல் துறையில் பாய் மோகன் சிங் தனது முத்திரையைப் பதித்திருந்தார். இந்த காம்போஸ் மாத்திரைகளில் ரோச் எனற நிறுவனம் தயாரிக்கும் வேலியம் என்ற மருத்தினைப் போலவே இருந்தது. ஆனால் ரோச் நிறுவனம் இந்தியாவில் அதற்கான காப்புரிமையைப் பெறாமல் இருந்தது.

1970 களின் முற்பகுதியில் பாய் மோகன் சிங் இம்மருந்தின் தாயாரிப்பு முறையை இந்தியச் செயல்முறையில் மாற்றி அதற்கான காப்புரிமையைப் பெற்றார். ஒரு தலைகீழ் பொறியியல் தொழில்நுட்பம் மூலமாக உலகில் எந்த தயாரிப்புக்கும் காப்புரிமையைப் பெற முடியும் என உலகிற்கு உணர்த்தினார். பின்னர் அவர் மொஹாலியில் R & D வசதியுடன் இந்நிறுவனத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ராசில்லின், சிப்ரான், மாத்திரைகளை ஒன்றன் பின் ஒன்றாக உற்பத்தி செய்தது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்_மோகன்_சிங்&oldid=2712004" இலிருந்து மீள்விக்கப்பட்டது