பாயிலின் விதி
Jump to navigation
Jump to search

வெப்பநிலையும் திணிவும் மாறாதிருக்கும் போது அழுத்தத்திற்கும் கனவளவிற்கும் இடையிலான தொடர்பினைக் காட்டும் இயங்குபடம்.
பாயி்லின் விதி (Boyle's law) என்பது கன அளவின் மீதான அழுத்தத்துக்கு உட்படும் போது வாயுக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை விளக்கும் விதி அகும். இவ்விதியின்படி மாறாத வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தமும் அதன் கன அளவும் எதிர் விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன. இதனை 1662 ஆம் ஆண்டில் ராபர்ட் பாயில் என்னும் விஞ்ஞானி கண்டுபிடித்தார். இதனைக் கணித முறையில்,
P ∞ 1/V, ( மாறாத வெப்பநிலையில் ) அல்லது PV = k, (ஓர் மாறிலி)
வெப்பநிலை T ஆகவும், வாயுவின் கன அளவு V1 ஆகவும் உள்ளபோது அழுத்தம் P1 ஆக இருக்கும். அதே வெப்பநிலையில் வாயுவின் கன் அளவு V2 ஆகவும் அதன் அழுத்தம் P2 ஆகவும் இருந்தால் இவ்விதியின்படி
P1V1 =P2v2 = மாறிலி என்று எழுதலாம்.