பாட்டுலைனியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாட்டுலைனியம்
A 14-year-old with botulism. Note the bilateral total ophthalmoplegia with ptosis in the left image and the dilated, fixed pupils in the right image. This child was fully conscious.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10A05.1
ஐ.சி.டி.-9005.1,040.41,040.42
ஈமெடிசின்article/213311
பேசியண்ட் ஐ.இபாட்டுலைனியம்

பாட்டுலைனியம் (botulism, இலத்தீன்: botulus, "சோசேச்சு") என்ற அரிதான நோய் குளோசுட்ரிடியம் பாட்டுலினம் (Clostridium botulinum) என்ற பாக்டீரியாவின் வளர்சிதை மாற்றக் கழிவுகளால் ஏற்படும் பாட்டுலினியம் நஞ்சினால் உண்டாகும் இழையச் செயலிழப்பு நோயாகும். இந்த நோய் பரந்தளவில் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் மீன் இனங்களைத் தாக்குகிறது [1]. இந்த நச்சுத்தன்மை மனித உடலில் மூன்று விதமாக உள்ளேறலாம்:

  • குழந்தைகளின் செரிமானப்பாதையில் பாக்டீரியாக் குடியேற்றம் (இளம் குழந்தை பாட்டலைனியம்) அல்லது
  • அவர்களது உணவில் கலப்படமான நச்சுதன்மை மூலம் பெரியவர்களின் குடல்பாதையில் ஈர்க்கப்படுதல் மற்றும்
  • காயத்தில் பாக்டீரியா கலப்பு[2]

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றுவதில்லை. குறிப்பாக இறைச்சியிலிருந்து பெற வாய்ப்புள்ளதால் இலத்தீனத்தில் சோசேச்சு எனப்பொருள்படும் பாட்டுலசு என அழைக்கபடுகிறது. நோய் அறிகுறிகள் காய்ச்சல், வாந்தி, பேசுவதில் துன்பம், முகதசைகள் இறுக்கம் என்பனவாகும். இந்நோயின் தாக்கமாக முகத்தின் தசைகள் செயலிழப்பதும் படிப்படியாக பிற உறுப்புகளுக்குப் பரவுவதும் நிகழ்கிறது. தீவிரமான நோய் தாக்கலில் மூச்சு விட உதவும் தசைகளை செயலிழக்க வைத்து மூச்சடைப்பு ஏற்படலாம். இத்தகைய உயிருக்கு ஆபத்தான நோய்நிலையால் அனைத்து பாட்டுலைனியம் அறிகுறிகளும் மருத்துவ நெருக்கடிகளாக சிகிட்சை அளிக்கப்படுகின்றன.[2] பொது சுகாதாரத் துறையினரும் இந்த நோய்க் காரணியை அடையாளம் கண்டு தடுக்க முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.

உணவை நன்கு கொதிக்கவைத்த நீரில் சமைப்பதன் மூலமும்[1] 121 °C (250 °F) நிலையில் மூன்று நிமிடங்களுக்கு நீராவி அழுத்தத்தில் வைப்பது மூலமும் இந்த நோயைத் தடுக்கலாம். குழந்தைகளுக்கு தேன் கொடுக்காமல் இருப்பதும் நோயைத் தடுக்க உதவும்.[3]

இதே பாட்டுலைனியம் நஞ்சு வயதானவர்கள் இளமையாகத் தோற்றமளிக்க முக தசை சுருக்கங்களை களைய உதவும் பாட்டாக்சு களிமத்தில் உட்கூறாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.who.int/mediacentre/factsheets/fs270/en/
  2. 2.0 2.1 Sobel J (October 2005). "Botulism". Clin. Infect. Dis. 41 (8): 1167–73. doi:10.1086/444507. பப்மெட்:16163636. 
  3. Stephen S. Arnon et al. (February 1979). "Honey and other environmental risk factors for infant botulism". The Journal of Pediatrics 94 (2): 331–336. doi:10.1016/S0022-3476(79)80863-X. பப்மெட்:368301. https://archive.org/details/sim_journal-of-pediatrics_1979-02_94_2/page/331. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டுலைனியம்&oldid=3700031" இலிருந்து மீள்விக்கப்பட்டது