பாசிபாஸ்
கிரேக்க தொன்மவியலில் குறிப்பிடப்படும், பாசிபாஸ் (Pasiphaë) என்வர் கிரீட் தீவின் ஒரு அரசி ஆவார்.
குடும்பம்
[தொகு]சூரியனின் டைட்டன் கடவுளான ஹீலியோஸின் மகள்தான் பாசிபாஸ். [1] [2] இவர் சர்க்கஸ், ஈய்ட்ஸ் மற்றும் பெர்சஸ் ஆஃப் கொல்கிஸின் சகோதரியும் ஆவார், இவர் கிரீட்டின் மன்னர் மினோசை மணந்தார் . மினோசுடனான வாழ்வில், இவர் அககாலிஸ், அரியட்னே, ஆண்ட்ரோஜியஸ், கிளௌகஸ், டீகாலியன், பீட்ரா, ஜெனோடைஸ் கேட்ரியஸ் ஆகியோரின் தாயானார். மேலும் மினோட்டூர் என்று அழைக்கப்படும் ஆஸ்டரியனின் தாயும் ஆவார்.
மினோட்டூர்
[தொகு]பொசைடனின் ஒரு சாபத்திற்குப் பிறகு, பாசிபாஸ் போசைடன் அனுப்பிய ஒரு வெள்ளை காளமீது காமுற்று அதனுடன் இணைந்து தாயாகிறார். [3]
கிரேக்க மொழியின் மினோவான் புராணத்தின்படி, [4] காளையுடன் புணர்திட, இவருக்கு ஏதெனியன் கலைஞரான டெடாலசால் [5] ஒரு மூடியுடன்கூடிய சிறிய மரத்தினாலான மாடு உருவாக்கபடுகிறது. அந்த மர மாட்டுக்குள் தன்னை பொருத்திக்கொண்டு இவர் காளையுடனான தனது கலவி ஆசையை தீர்த்துக் கொள்கிறார். [6]
குறிப்புகள்
[தொகு]- ↑ Hesiod, Theogony 346.
- ↑ Pasiphaë was thus the half-sister of Aeëtes and of Circe. Diodorus Siculus (4.60.4) made the mother of Pasiphaë the island-nymph Crete herself.
- ↑ Pseudo-Apollodorus, Bibliotheke 3.1.4
- ↑ Specific astrological or calendrical interpretations of the mystic mating of the "wide-shining" daughter of the Sun with a mythological bull, transformed into an unnatural curse in Hellene myth, are prone to variability and debate.
- ↑ Daedalus was of the line of the chthonic king at Athens Erechtheus.
- ↑ Greek myth characteristically emphasizes the accursed unnaturalness of a mystical marriage conceived literally as merely carnal: a fragment of Bacchylides alludes to "her unspeakable sickness" and Hyginus (Fabulae 40) to "an unnatural love for a bull".
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Pasiphae தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.