பாசவக் குளம் (அனுராதபுரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசவக் குளம் (Bassawa Kulam) என்பது என்பது தற்போது முற்றிலும் சிங்கள மக்கள் வாழும் பிரதேசமாக மாறியுள்ள இலங்கை, அனுராதப்புரத்தில் இருக்கும் ஒரு குளமாகும். இப்படி பழங்காலத்தில் அனுராதபுரம் பகுதியில் பல ஊர்களின் பெயர்களும், குளங்களின் பெயர்களும் தமிழ் பெயர்களாகவே இருந்துள்ளன என்பதை வரலாற்று ஆவணங்கள் ஊடாக அறியமுடிகிறது. இருப்பினும் தமிழர் அடையாளங்கள் இலங்கையில் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாலும், பெயர்கள் மாற்றப்பட்டு வருவதாலும் அவற்றின் தடங்கள் தற்போது காண்பது அரிதாகிவருகின்றன. இருப்பினும் பழங்கால வரைப்படம் ஒன்றில் இந்த குளத்தின் தமிழ் பெயர் காணப்படுகிறது. [1]

சொல்விளக்கம்[தொகு]

"Bassawa Kulama" என்பதில் "Kulama" எனும் சொல்லில் உள்ள "குளம" எனும் சொல், சிங்களவர்கள் "குளம்" என்பதில் உள்ள குற்றை அகற்றிவிட்டு உச்சரிக்கும் வழக்காகும். சிங்களத்தில் குளத்திற்கு வெவ என்றே சொல்வதால். இக்குளத்தின் பெயர் தமிழ் பெயர் என்பதை உறுதிசெய்ய முடிகிறது.

இது இப்பகுதியில் முன்னாள் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளின் ஒன்றாகக்கொள்ளலாம்.

மேற்கோள்கள்[தொகு]