பாங்கர் நிமித்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாங்கர் நிமித்தம் 12 மணமக்களுக்குப் பாங்காயினோர் கூட்டிவைக்கும் திருமண வகை 12 எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதனை உரையாசிரியர் இளம்பூரணர் விரித்துரைக்கிறார்.[1]

பிரமம், பிரசாத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்கும் பெருந்திணை. [2]

அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்றும் கைக்கிளை. [3]

இடையில் உள்ள யாழோர் கூட்டம் (காந்திருவம்) 5 வகை.

களவில்
  1. களவு (தோழி உதவி)
  2. உடன்போக்கு (தோழி உதவி)
கற்பில்
  1. இற்கிழத்தி (தூண்டுபவர்)
  2. காமக்கிழத்தி (தூண்டுபவர்)
  3. காதற்பரத்தை (தூண்டுபவர்)

என்பன. இந்த ஐந்தும் தமிழ் இலக்கியங்களில் பயின்றுவரும்.

இந்த உறவுகள் ஏதோ ஒன்றிரண்டு நிமித்தக் காரணங்களினால் பிறர் தூண்டுதலின் பேரில் நிகழ்பவை.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. தொல்காப்பியம் களவியல் 13 முதல் 16
  2. பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே. - தொல்காப்பியம் களவியல் 15
  3. முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே - தொல்காப்பியம் களவியல் 14
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கர்_நிமித்தம்&oldid=3229995" இலிருந்து மீள்விக்கப்பட்டது