உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கு நீரிணை கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீனவர் விவகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாக்கு நீரிணை கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீனவர் விவகாரம் அண்மைக்காலமாக பலராலும் பேசப்படும் ஒரு விடயமாக பாக்குநீரினை பிரதேசத்தில் இலங்கை மீனவர்களும் இந்தியமீனவர்களும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை அறியமுடிகின்றது. இதன் காரணமாக மோதல்களும் சிறைப்பிடிப்புக்களும் உயிர் ஆபத்துக்களும் என மீனவ விவகாரங்கள் ஊடகங்களை ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் காலணித்துவ பேரரசுகளின் வருகையுடன் கடல்பரப்பு கூறுபோட்டு எல்லை பிரிக்கப்பட்டது. முதலாளித்துவ முறையிலான மீன்பிடி உற்பத்தி முறைகளும் புகுத்தப்பட்டன. 1960 மற்றும் 1970 களின் அபிவிருத்தி திட்டங்கள் விவசாயத்தினை பசுமைப்புரட்சியின் ஊடாகவும் கடல்தொழிலினை நீலப்புரட்சியின் ஊடாகவும் அதிக இலாபத்தை தரும் வழிமுறைகளாக மாற்றின. குறிப்பாக கடலில் நிலத்தடி இழுவைப்படகு முறையிலான தொழில்நுட்பமானது அதிகளவு மீன்களை பிடிக்க பயன்பட்டாலும் மாறாக சூழலியல் ரீதியான பாதிப்புக்களையும் பிறநாட்டுக் கடற்பரப்புக்குள் அத்துமீறியும் வளங்களை சூறையாடல் வன்முறையான மோதல்களை ஏற்படுத்தல் போன்ற செயன்முறைகளையும் ஏற்பட்ட வண்ணமே இருக்கின்றது. பாக்குநீரிணை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி செல்கின்ற இலங்கை வடபகுதி மீனவர்களும் இந்திய தென்பகுதி மீனவர்களும் நாளுக்கு நாள் முரன்பாடுகளை ஏற்படுத்தி கொண்டே இருக்கின்றனர். இக்கட்டுரையானது பாக்குநீரினையின் புவியியற்பின்னனி வரலாற்றுப்பின்னனி பாக்குநீரிணைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இருநாட்டு மீனவர்களுடைய மீன்பிடிச்செயன்முறை எல்லை தான்டி அத்துமீறிய மீன்பிடியால் ஏற்படுகின்ற சமூக பொருளாதார தாக்கம் என்பவற்றுடன் பிரச்சனைக்கான தீர்வு நடவடிக்கையினையும் ஆராய்வதனை நோக்கமாக கொண்டுள்ளது.

பாக்குநீரிணை புவியியல் பின்னணி

[தொகு]

பாக்குநீரிணையானது அண்ணளவாக வடஅகலக்கோடு 9 30 00 வரையும் கிழக்குநெடுங்கோடு 79 15 வரையும் காணப்படுகின்றது. இது இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் நீரினையாகும். மேட்டுப்பாங்கான ஆதாம்பாலம் இதனை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கின்றது. இது 53மஅ – 80மஅ அகலமுடையது. இந்த நீரினைக்கு மதராசு மாகாணத்தின் ஆளுனராக இருந்த சர். இராபட்பாக் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பகுதி கடல்வளம் நிறைந்து காணப்படுவதற்கான சமுத்திரச்சூழலையும் சிறப்பாக கொண்டுள்ளது. ஆழம் குறைவான அகன்ற கண்டத்திட்டுக்களையும் சேறும் மணலும் கலற்த அடித்தளங்களும் இடையிடையே முருகைக்கற்கள் என்பவற்றையும் கொண்டுள்ளது. இலங்கை இந்திய நிலத்திணிவுகளுக்கு இடையில் அமைந்துள்ளதால் பருவப்பெயர்ச்சிக்காற்றினால் பெரிதும் பாதிப்படைவதில்லை மேலும் இருநாட்டு நதிகளும் இப்பகுதிகளில் கலப்பதனால் மீனிற்கு வளமான பிளாந்தன்களை காவி வருவதுடன் அடையல்களும் படியவிடப்படுகின்றன. மீனினங்கள் வாழ்வதற்கேற்ப உவப்பான தன்மையினையும் வழங்குகின்றது. குறிப்பாக இந்தியாவின் வைகை ஆறு கங்கை கழிமுகம் என்பவற்றை குறிப்பிடவாம் கங்கைக்கழிமுகமானது பத்மா ஆறு உள்ளிட்ட பல கிளையாறுகள் ஒன்றினைந்து கங்கைக்கழிமுத்தில் கலக்கின்றது. மன்னார் தீவு ஆதாம் பாலம் பாம்பன் தீவு என்பன பாரம்பரிய நீர்ப்பரப்புபகுதியினை ஒரு கூறாக பிரிக்கின்றது. அந்த நீர்ப்பரப்பில் பாக்குநீரினைப்பகுதியே மிக ஒடுங்கிய கடற்பரப்பாக காணப்படுகின்றது. இவ் புவியிpயல் ரீதியான அமைப்பானது தமிழ்நாட்டு கரையோரத்தினதும் இலங்கையின் வடபகுதிக்கரையோரத்தின் வரலாற்றினை யும் பொருளாதாரத்தையும் பண்பாட்டையும் ஆழமாகக் பாதிக்கின்றது. இதன்காரணமாக இருநாடுகளுக்கு இடையேயும் நிர்வாக மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளையும் தோற்றுவித்துள்ளது. 9ஆஆழமும் குறைந்தளவிலான நீரலைகளும் ஒப்பீட்டளவில் ஆழமற்ற அமைதியான குடாவாக காணப்படுகின்றது. பாக்குக்குடா பருவகால உணவுகாவிச் செல்லும் நீரோட்டங்ளினாலும் சிறந்த மீன்வளம் இறால் களம் மற்றும் முத்துக்குளம் என்பவற்றாலும் முக்கியமானதனக காணப்படுகின்றது. இவ்வாறு பாக்குநீரினைப்பகுதியானது வளவாய்ப்பினைக் கொண்டு காணப்படுகின்றது. இதன் மீனின செழிப்புக்கு புவியியல் ரீதியிலான அடைவிடம் முக்கியத்துவம் பெறுகின்றது.

பாக்கு நீரிணை வரலாற்றுப்பின்னணி

[தொகு]

விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக இயற்கை வளங்களை பயன்படுத்த புதிய தொழில்நுட்ப முறைகளும் கருவிகளும் என பரவலான வாய்ப்புக்கள் அதிகரித்தது. இதன் தாக்கம் கடலடியின் கீழ் பெருகியுள்ள வளங்களை வெளிக்கொணர்ந்து பயன்படுத்தும் நிலை பெருகியுள்ளது. இதனையடுத்து கடல்களிலும் இருந்து கிடைக்கும் பொருட்களின் தேவை அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப பெருகியுள்ளது. எனவே கடல்கள் மீது அரசுக்குள்ளான அக்கறையும் பெருகியுள்ளது. முன்னர் சர்வதேச கடல் பிரச்சனைகள் குறுகிய முக்கியத்துவமுடையனவாக இருந்தன. புpன்னர் நீலப்புரட்சியின் விளைவாக கடல்களில் அக்கறையுள்ள அரசுகளின் எண்ணிக்கையை பெருக்கியுள்ளது. இதனால் எல்லோருக்கும் எட்டக்கூடிய கடல்கள் பல கரையோர அரசுகளின் முரன்பாடுகள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. இதன் விளைவாக சர்வதேச கடற்சட்டம் உருவாகியது. இரண்டாம் உலகமகா யுத்தத்தை தொடர்ந்து சர்வதேச கடல்சட்டத்தின் முக்கிய கருத்து நிலைகள் ஜக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையின் கீழ் மறுபரிசீலனை செய்யப்பட்டது. இதனூடாக பல்வேறு சட்டப்பிரச்சனைகளும் ஆராயப்பட்டது. தொடர்ந்து 1982 இல் மூன்றாம் அமர்வில் இயற்கை வளங்களையும் அதனை எப்படி பயன்படுத்துவது சம்பந்தமான விதிமுறைகளையும் முன்வைக்கப்பட்டது இந்த உடன்படிக்கை இன்றைய கடல் சட்டத்தின் ஆவணரீதியான வெளிப்பாடாகும்.

  • பல்வேறு தேவைகள் நிமித்தம் உலக கடற்பரப்புக்கள்
  • உள்நாட்டு நீர்ப்பரப்பு
  • அரச எல்லைக்கு உட்பட்ட நீர்பரப்பு (0-12 மைல்)
  • ஒட்டியுள்ள மண்டலம் (0-12 மைல்)
  • திறந்த வெளிக்கடல்
  • கரையோர அரசின் கண்டத்திற்கு (200 ஆழம்வரை)
  • கண்டத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதி
  • தனிப்பட்ட பொருளாதார மண்டலம் (200 மைல் என பிரிக்கப்பட்டுள்ளது)

இலங்கையை பொறுத்தவரை வடக்கு வடமேற்கு பகுதிகளில் இந்தியாவிற்கு இடைப்பட்ட கடற்பரப்பில் எல்லைகள் வேறுபட்ட இயல்புகள் கொண்டனவாக காணப்படுகின்றது. இங்கு குறுகிய கடற்பரப்பு காணப்படுவதனால் ஆகும் ஆரம்பத்தில் ஆட்புல எல்லை மூன்று மைல்களாகவும் பின்னர் ஆறு மைல்களாகவும் இருந்தபோது இலங்கை இந்திய கடலோர எல்லைகளில் பிரச்சனை எழவில்லை பின்னர் ஆள்புல எல்லையை 12 மைல்களாகவும் விஸ்தரித்தபோது குறுகிய பாக்குநீரிணை பகுதிகளின் இடைவெளி 24 மைல்களுக்கு குறைவாக இருந்தமையினால் இவ் எல்லைக்கோடு ஒன்றின் மேல் ஒன்று மேற்படியும் நிலை தோன்றியது. இதனால் அகல நெடுங்கோடுகள் அடிப்படையில் இலங்கை இந்திய கடலோர எல்லைகள் வகுக்கப்பட்டன.

1974 இல் பாக்கு நீரினை வரையும் 1976 இல் மன்னார் வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் எல்லைகள் வரைய ஒரு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. இவ் ஒப்பந்தங்கள் மூலம் அதுவரை காலமும் சர்ச்சைக்குரியதாக காணப்பட்ட கச்சதீவுப்பகுதிகள் இலங்கையின் வசமானது. 1983 இல் இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து இலங்கை அரசினால் பாதுகாப்பு கருதி இராணுவ நடவடிக்கை பலப்படுத்தியமை தொடர்ந்து கச்சதீவு பிராந்தியம் அமைதியற்று காணப்படுகின்றது. அப்போது ஜெயவர்த்தன அரசினால் இலங்கை அரசு கடல்வலய எல்லை பாதுகாப்புச்சட்டத்தின் பிரகாரம் காவல் வலய எல்லை ஒன்றினை பிரகடனம் செய்தது. எனினும் இதனைப் பொருட்படுத்தாது பல தழிழ் நாட்டு மீனவர்களை அத்துமீறி மீன்பிடியால் ஈடுபட்டு கடற்கடையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தனர். இதனால் அகில இந்திய ரீதியில் ஒப்பந்த நிபந்தனைகளை இலங்கை மீறியது. ஏனக்கூறி ஆர்ப்பாட்டங்கள் செய்தன. இதன் விளைவாக எல்லை மீறிய மீன்பிடி மீன்டும் அரங்கேறியது.

1985இலும் 1993இலும் இலங்கை அரசு மேற்கொன்ட கடல்வலய தடைச்சட்டம் காரணமாக இருபகுதியையும் சேர்ந்த பெரும் தொகையான மக்கள் தமது தொழில்வாய்ப்பினை இழந்தனர். இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் வடபகுதி மீனவர்களை முடக்கிப்போட்டது. பின்னர் யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து இலங்கை வடபகுதி மீனர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடமுடியவில்லை. இது தொடர் பிரச்சனையாகவே இன்றும் உள்ளது.

பாக்கு நீரிணையில் மீன்பிடிச் செயன்முறை

[தொகு]

பாக்குநீரிணையில் மேற்கொள்ளப்படும் மீன்பிடிச்செயன்முறை என்று நோக்கும் போது இந்திய தென்பகுதி மீனவர்கள் வர்த்தக ரீதியான மீன்பிடித்தல் முறையான றோலர் வள்ளம் இழுவைப்படகு டைனமேற் என்பன அதிகரித்து வரும் அதேவேளை வடஇலங்கை மீனவர்கள் பாரம்பரிய முறையிலான மீன்பிடித்தல் இன்னமும் இருந்து வருகின்றது. இதன் காரணமாக இழுவைப்படகுகள் மூலமான அத்துமீறல்கள் வட இலங்கைப்பகுதிக்குள் மீனவர்களுக்குவாழ்வாதார இழப்புக்களை ஏற்படுத்தும் அதேவேளை தமிழ்நாட்டு வர்த்தக ரீதியிலான மீன்பிடித்தொழில் அதிக வருவாயை ஏற்படுத்துகின்றது. வடபகுதி இலங்கை மீனவர்கள் 18- 23 இடி நீளமான பைபர் படகுகளும் மோட்டார் படகுகளுமே அதிகளவு பயன்னடுத்துகின்றனர் மற்றும் கட்டுமரம் வள்ளம் ஜம்பதிற்கும் குறைந்த குதிரைச்சக்தியுள்ள படகுகள் படுப்புவலைகள் இறால்கூடுகள் கரைவலைகள் வீச்சுவலைகள் நீள்வரிகைத்தூன்டில்கள் போன்ற மரபுவழியிலான உபகரணங்கள் பயன்படுத்தப்படும் அதேவேளை தென்பகுதி மீனவர்கள் பாரிய றொலர்கள் இழுவைப்படகுகள் போன்ற கடல் வழங்களை பாதிக்கும் மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்துவதனால் கடல் அடித்தளம் வரையாகக் காணப்படும். மீனவளங்களையும் முருகைக்கற்பாறைகளையும் சேதமடையச் செய்வதுடன் மீன் இனக்கப்பெருக்கத்தின் சாதகமற்ற தன்மையினை ஏற்படுத்துகின்றது. இது சமத்திர சூழல் தொகுதியினை அச்சுறுத்துவதாகக் காணப்படுகிறது. இத்துடன் அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையான டைனமற்றைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் உலோகக் கம்பிகள் கொண்டு தயரிக்கப்பட்ட அகல சிறகு வலைகள், சுருக்கு வலைகள்,தங்கூசிவலைகள் போன்றவற்றை வகைதொகுதியின்றி சட்டவிரோதமாக பயன் படுத்துவதனால் வட பகுதி மீன்வளம் சூறையாடப்படுகின்றது. ஆரம்பத்தில் நெடுந்தீவு பாக்குநீரினை கடல் பரப்புக்களில் தான் இந்திய மீனவர்களின் ஊடுறுவல் காணப்படுகிறது. இன்று மன்னார் குடாவின் தென்பகுதியில் உள்ள கடல் பரப்புக்களில் இந்திய மினவர்களின் அத்துமீறல் அதிகளவு இழுவைப் படகு மட்டுமல்லாமல் பெரிய படகுகளில் வந்து மிகவும் நீளமாகத் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை சுமார் 7மஅ அப்பால் உள்ள மன்னார் வங்கால கிராமத்தில் தங்கியிருந்து வலைகளைப் பாவித்து அங்குள்ள மீன்வளத்தை சூரையாடிச் செல்கின்றனர். ஒட்டு மொத்தமாக மன்னார் வளைகுடா முழுவதும் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த மீனவர்களின் கட்டுப்பாட்டில் தான் காணப்படுகிறது.

எல்லையைத்தாண்டல் பிரச்சனையின் தாக்கம்

[தொகு]

பாக்கு நிரினைக் கடல்பிராந்தியத்துக்கு ஒரு சமாதான சக வாழ்வுப் பாரம்பரியம் இருந்து வந்துள்ளது. எனினும் பிற்பட்ட கால இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதைத் தொட்ந்து வட பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கத் தொடங்கினார்கள் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக தமிழ்நாட்டு இழுவைப் படகுகள் மீன்பிடிப்பதால் ஒவ்வொரு கிழமையும் மூன்று நாட்களுக்கு மீன்பிடிப்பதில் இருந்து 50 000 வரையிலான மீனவர்கள் தடுக்கப்படுகின்றன. இச்சட்ட விரோத மீன்பிடியால் மீனவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 200 000 – 400 000 வரை வருமாணத்தை இழக்கின்றனர். மீன்பிடித்தலையே நம்பி அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்தும் வட பகுதி மீனவர்களின் வாழ்க்கை நிலை பாதிப்பை எதிர்கொள்கிறது. இலங்கையில் சிவில் யுத்தத்துக்குப் முன்னர் வடமாகாணமீன்பிடித் துறை மிகவும் வளர்ச்சியடைந்து காணப்பட்டது. 1982ம் ஆண்டு இலங்கையில் பிடிக்கப்பட்ட மொத்த மீன்களில் 25மூ யாழ்மாவட்டத்தில் மாத்திரம் பிடிக்கப்பட்டது இந்தியா அமைதிப்படை வருகை மற்றும் 2002 -2006 வரை காலப்பகுதிகளில் யுத்த நிறுத்தம் போன்ற இரு இடைவெளிகளைத் தவிர மற்றைய காலப்பகுதிகளில் வடபகுதி மீன் உற்பத்தி பூச்சியமாகவே காணப்பட்டது.

எல்லையைத் தாண்டல் பிரச்சனைக்குத் தீர்வுகள்

[தொகு]

இலங்கை இந்தியாவுக்கு இடையில் உள்ள ஆள்புலவு எல்லையானது மன்னார் குடாவிலே பாக்குநீரினையை ஊடறுத்த எல்லையாக அமைந்துள்ளது. அந்த எல்லையை மீறுவது என்பது எங்கள் நாட்டின் இறமையை மீறுகின்ற செயல் இருப்பினும் இந்திய மீனவர்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது. அதுதொடர்பாக மீனவர்கள் அரசிடம் பலமுறை தெரியப்படுத்தியும் இலங்கை அரசு தனது அரிசியல் நோக்கங்களை அடைந்து கொள்ள சில விட்டுக் கொடுப்புகளுடன் நடந்து வருவதை அறிய முடிகிறது. ஏல்லை தான்டி அத்துமீறும் பிரச்சனை தொடர்பாக மீனவர்களுக்கடையில் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வினை இட்ட முடியாது இது தொடர்பாக பல்வேறு தரப்பினர்களுடன் அதாவது மீனவ அமைப்புக்கள் சட்ட வல்லுனர்கள் பொருளியலாளர்கள் அரசியல் வாதிகள் போன்ற பல்துறைவல்லுனர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கருத்துக்களை உள்வாங்கி இப் பிரச்சனைக்கு தீரக்கமான முடிவுகளை முன் வைப்பதன் மூலம் தீர்வினை எட்ட முடியும்.

இலங்கை கடற்படையினரும் இந்தியக் கடற்படையினரும் இணைந்து எல்லை ஓரப் பாதுகாப்பினை பலப்படுத்தி ரோந்துகளை மேற்கொண்டு எல்லை தாண்டிவரும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். இருநாட்டுக் கடற்படையினரும் எல்லை தான்டிவரும் சட்ட ரீதியான நடவெடிக்கைகளை மேற்கொள்வதுடன் மீனவர்களை துண்புறுத்தலுக்கு உட்படுத்தாது தொடர்ச்சியான பாதுகாப்பினைப் பலப்படுத்தி எல்லை தாண்டிவரும் மீனவர் பிரச்சனையை தடுப்பதன் ஊடாக அப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்.

முடிவுரை

[தொகு]

இலங்கை இந்திய மீனவர்கள் பாக்குநீரினைப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் போது இலங்கையின் எல்லைப்பகுதிக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல் வடபகுதி மீனவர்களை அச்சுருத்தி வருகிறது. இவ்வாறான பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டாலே வடபகுதி மீனவர்களின் பொருளாதாரம் செழிப்படையும். இவ்வாறு செழிப்படைந்தால் மாத்திரமே இலங்கை தேசிய உற்பத்தியில் வளர்ச்சி பெறும் ஏனெனில் வடபகுதியில் இருந்து தான் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து அன்னிய செலவானியை சம்பாதிக்கின்றது. இறால், சிங்கறால், நண்டு,கணவாய் போன்றவையும் மீன்வகைகளும் உற்பத்தியாகின்றன. எனவே “இந்திய அரசு தென்னிந்திய மீனவர்களுக்கு ஆழ்கடலில் இழுவை மடி நிறுத்த மீன்பிடித்தலை முற்று முழுதாக நிறுத்தி துண்டில் வரிசை படுப்பு வலை என்பன பயன்படுத்தி மீன்பிடித்தளை ஊக்கிவிற்பதுடன் கிiயோர மீன்வளரப்பு முறைக்கு உதவுவதுடன் இந்திய மீனவர்கள் தமது வட பகுதி மற்றும் தென் பகுதிகளில் மீன்பிடித்தலைத் தடுக்க முடியும் இவ்வாறான செயற்பாடுகளை இந்திய தமிழக அரசு மேற்கொள்ளும்போது இலங்கை வட பகுதி மீனவர்கள் முறன்பாடற்ற மீன்பிடியில் ஈடுபடுவார்கள் எனவே எமது நாட்டு மீனவர்களின் பிரச்சனைக்கான தீர்வினைப் பெற்று மீனவர்களின் வாழ்க்கையை வழப்படுத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது இதனைக் கருத்திற் கொண்டு இலங்கை அரசு செயற்படுமானால் பாக்குநீரினைப் பகுதியில் எல்லை தாண்டும் பிரச்சினைக்கு தீர்வினை பெற முடிவதுடன் பொருளாதார முன்னேற்றத்தினையும் எட்ட முடியாது.