உள்ளடக்கத்துக்குச் செல்

பாகிரா பறவைகள் காப்பகம்

ஆள்கூறுகள்: 26°54′23″N 83°06′15″E / 26.9063589°N 83.104282°E / 26.9063589; 83.104282
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bakhira Sanctuary
Bakhira lake
Map showing the location of Bakhira Sanctuary
Map showing the location of Bakhira Sanctuary
அமைவிடம்Sant Kabir Nagar district of Eastern Uttar Pradesh, India
அருகாமை நகரம்sant Kabir nagar district
ஆள்கூறுகள்26°54′23″N 83°06′15″E / 26.9063589°N 83.104282°E / 26.9063589; 83.104282
நிறுவப்பட்டது1980
நிருவாக அமைப்புGovernment of India
அலுவல் பெயர்Bakhira Wildlife Sanctuary
தெரியப்பட்டது29 June 2021
உசாவு எண்2465[1]

பாகிரா பறவைகள் காப்பகம் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை வெள்ளச் சமவெளி ஈரநிலமாக உள்ளது. இந்தச் சரணாலயம் 1980ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது கோரக்பூர் நகரத்திற்கு மேற்கே 44 கி. மீ. தொலைவில் கலிலாபாத்திலிருந்து 18 கி. மீ. தொலைவிலும், பசுதியிலிருந்து 55 கி. மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இது 29 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிவடைந்துள்ள நீர்நிலையின் பரந்த பகுதியாகும். இது கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் ஒரு முக்கியமான ஏரியாகும். இது பல புலம்பெயர்ந்த நீர்ப்பறவைகளுக்குக் குளிர்காலக் களத்தை வழங்குகிறது. இங்கு வசிக்கும் பறவைகளுக்கு இனப்பெருக்கத் தளத்தையும் வழங்குகிறது. இந்த ஏரியின் நீர் விவசாய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது பக்கிரா கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இதன் தோற்றத்திலிருந்து 15 கி. மீ. தூரம் வரையுள்ள மக்களுக்கு இந்த ஏரி பலனளிக்கின்றது. இந்தக் காப்பகத்திற்குள் உள்ள ஏரியை ஒட்டியுள்ள பாகிரா கிராமத்தின் பெயரும், 5 கிமீ சுற்றளவில் ஏரியைச் சுற்றியுள்ள நூற்று எட்டுக் கிராமங்களின் பெயரும் இணைந்து இதற்குச் சூட்டப்பட்டுள்ளது. சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த கிராமவாசிகள் மீன்பிடித்தல், விவசாய நடவடிக்கைகள் மற்றும் விறகு சேகரிப்பு ஆகியவற்றின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்த ஈரநிலத்தை நம்பியுள்ளனர். குளிர்காலத்தின் போது சைபீரிய நாட்டிலிருந்து பறவைகள் 5000 கி. மீ. தூரம் பயணம் செய்து இந்த ஏரியினை அடைகின்றன.

இது உலக ஈரநில தினத்தன்று (2 பிப்ரவரி 2022) இராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டது.[2]

பறவைகள் வலசைப்போதல்

[தொகு]

பாகிரா ஏரியைப் பார்வையிடச் சிறந்த நேரம் குளிர்காலமான நவம்பர் முதல் சனவரி மாதங்களாகும். இந்த நேரத்தில் திபெத்து, சீனா, ஐரோப்பா மற்றும் சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த பறவைகள் இங்கு வருகின்றன.[3]

அணுகல்

[தொகு]

சாலை மார்க்கமாக கோரக்பூர்-கலிலாபாத் சகாஜான்வாவிலிருந்து நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள தொடருந்து நிலையம் கலிலாபாது தொடருந்து நிலையம் ஆகும். இது கோரக்பூர்-இலக்னோ வழித் தடத்தில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோரக்பூர் வானூர்தி நிலையமாகும். இது 49 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[4]

ஈர்ப்பு

[தொகு]

சாம்பல்-தலை தாழைக்கோழி இங்குக் காணப்படும் அழகான பொதுவான நீர் பறவைகளில் ஒன்றாகும். நீண்ட சிவப்பு கால்கள் மற்றும் கால் விரல்கள், சிவப்பு நெற்றி மற்றும் கிராம கோழியை ஒத்த அளவு கொண்ட ஓர் அழகான ஆனால் விகாரமான ஊதா நீலப் பறவை. இந்தச் பாகிரா சரணாலயத்தில் வசிக்கும் ஒரு பொதுவான பறவையாகும்.

பக்கிராவுக்கு வரும் பறவைகளின் வகைகள், பக்கிராவில் வனத்துறை அலுவலகத்தின் சுவரொட்டி
ஏரி அருகே விவசாய நிலங்கள்

இந்த ஏரியில் 30க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும், லேபியோ ரோகிட்டா மற்றும் சன்னா சிற்றினங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bakhira Wildlife Sanctuary". Ramsar Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 2 March 2022.
  2. "Bakhira Bird Sanctuary". Archived from the original on 2013-10-02. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03.
  3. "Bakhira Bird Sanctuary". Archived from the original on 2013-10-02. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03.
  4. "Bakhira Bird Sanctuary". Archived from the original on 2013-10-02. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகிரா_பறவைகள்_காப்பகம்&oldid=4113809" இலிருந்து மீள்விக்கப்பட்டது