பாகவதமேளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது கருநாடக நாட்டுப்புற கலைகளில் ஒன்று. இதில் ஆடலும் பாடலும் உண்டு. பாடுபவன் பாகவதன் எனப்படுவான். குழுவினர் மாலையும் கொலுசும் அணிந்திருப்பர். பாலலீலை, அனுமன் - கருடப் போர் உள்ளிட்ட நிகழ்வுகள் பாடல்களாகப் பாடப்படுகின்றன. மேளம் அடித்துக்கொண்டு ஒவ்வொரு கதைகளாகப் பாடுவர். முன்மேளம், பின்மேளம் என்று இருபிரிவினர் உள்ளனர். முன்பிரிவினர் பாடுவதை கேட்டு பின்மேளப் பிரிவினர் பாடுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகவதமேளா&oldid=2095827" இலிருந்து மீள்விக்கப்பட்டது