பவுல் (எண்காலி)
Appearance
பவுல் (எண்காலி) | |
---|---|
ஏனைய பெயர்(கள்) | Paul Oktopus, Die Krake Paul |
இனம் | Octopus vulgaris |
பால் | ஆண் |
இறப்பு | 26 அக்டோபர் 2010 (வயது 2) யெர்மனி |
அறியப்படுவதற்கான காரணம் | கால்பந்து போட்டிகளின் முடிவை சரியாகக் கணித்ததால் |
உரிமையாளர் | Sea Life Centres |
Named after | Der Tintenfisch Paul Oktopus – Boy Lornsen எழுதிய கவிதை |
பவுல் என்ற எண்காலி (Paul the Octopus) (பிறப்பு ஜனவரி 26 2008 - இறப்பு: அக்டோபர் 26 2010) இடச்சுலாந்து (ஜெர்மனியில்) உள்ள ஓபர்ஃகௌசனில் (Oberhausen) உள்ள கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகத்தில் இருந்தது. இது 2010ல் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இடாய்ச்சுலாந்து அணி ஆடிய ஏழு ஆட்டங்களிலும் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறுபவர்களை சரியாகக் கணித்ததால் உலகம் முழுவதும் பரவலாக அறியப்பெற்றது.