பவுல் பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:44, 26 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்)
பவுல் பியா
மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் பியா (2009)
கமரூன் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 நவம்பர் 1982
பிரதமர்பெல்லோ பௌபா மைகாரி
லூக் அயாங்
சடௌ ஹயாடௌ
சைமன் அச்சிடி அச்சு
பீட்டர் மஃபானி முசோஞ்ஜ்
எப்ரைஹ்ம் இனோனி
பிலெமோன் யாங்
முன்னையவர்அகமதௌ அஹிட்ஜோ
கமரூன் பிரதமர்
பதவியில்
30 சூன் 1975 – 6 நவம்பர் 1982
குடியரசுத் தலைவர்அகமதௌ அஹிட்ஜோ
முன்னையவர்Simon Pierre Tchoungui (East Cameroon)
Salomon Tandeng Muna (West Cameroon)
பின்னவர்பெல்லோ பௌபா மைகாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 பெப்ரவரி 1933 (1933-02-13) (அகவை 91)
முவோமெக்கா, பிரெஞ்சு கமரூன்
(தற்போதைய கமரூன்)
அரசியல் கட்சிPeople's Democratic Movement
துணைவர்(கள்)Jeanne-Irène Biya (Before 1992)
Chantal Vigouroux (1994–present)
முன்னாள் கல்லூரிNational School of Administration
Paris Institute of Political Studies

பவுல் பியா (Paul Biya, இயற்்பெயர்: பவுல் பார்த்தலெமி பியா பை முவோன்டோ, பெப்ரவரி 13, 1933) நவம்பர் 6, 1982 முதல் தொடர்ந்து ஆறு முறை கமரூனின் குடியரசுத் தலைவராக இருந்து வரும் அரசியல்வாதி ஆவார்.[2][3] தெற்கு கமரூனின் முவோமெக்காவில் பிறந்த பியா 1960களில் குடியரசுத் தலைவர் அகமதௌ அஹிட்ஜோவின் தலைமையில் அரசு அதிகாரியாக விரைவான முன்னேற்றம் கண்டார். 1968 முதல் 1975 வரை குடியரசுத் தலைவரின் தலைமைச் செயலாளராகவும் பின்னர் கமரூனின் பிரதமராக 1975 முதல் 1982 வரையும் பணியாற்றினார். 1982ஆம் ஆண்டில் அஹிட்ஜோவின் திடீர் பதவி விலகலை அடுத்து குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பியா 1983-84 காலகட்டத்தில் தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டார்.

1980களில் ஒருக்கட்சி அரசியல்முறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1990களில் எழுந்த எதிர்ப்புகளுக்கிணங்க பல கட்சி அரசியலை அறிமுகப்படுத்தினார். 1992ஆம் ஆண்டில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் குறைந்த வாக்கெண்ணிக்கையில் தேர்வான பியா 1997, 2004 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளார். இந்த தேர்தல்களில் அனைத்திலுமே முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் ஏமாற்றி பதவியில் உள்ளதாகவும் எதிர்க்கட்சிகளும் மேற்கத்திய அரசுகளும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கமரூனின் முன்னாள் காலனித்துவ நாடான பிரான்சுடன் மிக அண்மித்த தொடர்பை பியா பராமரித்து வருகிறார்.

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paul Biya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
அரசியல் பதவிகள்
முன்னர்
சைமன் பியர்ரி சோங்கு
கிழக்கு கமரூனின் பிரதமர் ஆக
கமரூன் பிரதமர்
1975–1982
பின்னர்
பெல்லோ பௌபா மைகாரி
முன்னர்
சாலோமோன் டான்டெங் முனா
மேற்கு கமரூனின் பிரதமர் ஆக
முன்னர்
அகமதௌ அஹிட்ஜோ
கமரூன் குடியரசுத் தலைவர்
1982–present
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_பியா&oldid=2215076" இலிருந்து மீள்விக்கப்பட்டது