பவுல் நெய்லே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர் பவுல் நெய்லே (Sir Paul Neile) (1613 –பிப்ரவரி 1686) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் நாடாளுமன்றத்துக்கு 1640 இலும் 1673 முதல் 1677 வரையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெய்லே இரிச்சர்டு நெய்லேவின் மகனாக வெசுட்டுமினிசுட்டரில் பிறந்தார். இரிச்சர்டு நெய்லே பிறகு பேராயராகவும் ஆனார்]. இவர் 1627, மே, 20 இல் கேம்பிரிட்ஜ் பெம்புரோக்கு கல்லூரியில் பயின்றார்தன் 14 ஆம் அகவையில் சேர்ந்து கல்வி பயின்றார். 1631 இல் இளங்களை பட்டத்தைப் பெற்றார்.[1]இவர் முதலாம் சார்லசு அரசரின் தனிமாளைகை அதிகாரிகளில் ஒருவர் ஆனார்.[2] இவர் யார்க்கில் ஆட்டன் போன்வில்லியில் இருந்தபோது 1633 மே, 27 இல் மாவீரர் (நைட்) பட்டம் பெற்றார்.[3]

இவர் 1640, ஏப்பிரலில் ஐக்கிய இராச்சிய இரிப்பன் நாடாளுமன்றத் தொகுதியில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நாடாளும்ன்றம் குறுகிய வாணாளே இருந்தது.[1]இவர் இடைப்பட்ட காலத்தில் பெர்க்சயர் சார்ந்த வாதாமில் வாழ்ந்துவந்தார். இங்கே இவர் வானியல் கற்று தொலைநோக்கிகளைச் செய்யலானார். சர் கிறித்தோபர் விரென் வால்தாமில் 1655 இல் நெய்லேவின் தொலைநோக்கியப் பயன்படுத்தியுள்ளார். இவர் கிஎசாம் கல்லூரிக்கு 1658 இல் 35 அடி தொலைநோக்கியை வழங்கியுள்ளார். இவர் அரசு கழகந்தின் 12 நிறுவன உறுப்பினரில் ஒருவராவார். 1661 இல் அக்கழகம் இவரை தன் இருப்பில் தொடரச் செய்து தொலைநோக்கி ஆடிகளை வடிவமைக்கச் சொன்னது.[2]

நெய்லே 1673 இல் ஐக்கிய இராச்சிய நெவாக் நாடாளுமன்றத் தொகுதியில் [4] தனது வணிகப் பங்குதாரரான என்றி சாவைலுடன் இணைந்து நின்று வெற்றி பெற்றார். என்றாலும் இந்தத் தேர்தல் மக்களேற்பின்றி வழக்கு தொடுக்கப்பட்டது. இவர் அடுத்த நான்காண்டுகளுக்க் இந்த உறுப்பினர் இருக்கையில் அமர முடியவில்லை. இந்தத் தேர்தல் முடிவு செல்லாது என 1677, மார்ச்சு 21 இல் தீர்ப்பும் வந்தது.[4]

நெய்லே தன் 73 ஆம் அகவையில் இறந்தார்.

நெய்லே தர்காம் பேராயரின் உதவியாளரான கேபிரியேல் கிளார்க்கின் மகளாகிய எலிசபெத்து கிளார்க்கை மணந்தார்.[1] இவர்களின் வில்லியம் நெய்லே எனும் மகன் கணிதவியலாலாரும் வானியலாளரும் ஆவார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

முன்னர்
நாடாளுமன்றம் 1629 இல் இருந்து தற்காலிகமாக நீக்க்ப்பட்டிருந்தது
இரிப்பன் நாடாளுமன்ற உறுப்பினர்
1640 (ஏப்பிரல்)
இணைந்து: வில்லியம் மல்லோரி
பின்னர்
வில்லியம் மல்லோரி
முன்னர்
புதிய உருவாக்கம்
நெவாக் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்
இணைந்து: என்றி சாவைல்
பின்னர்
என்றி சாவைல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_நெய்லே&oldid=3628588" இருந்து மீள்விக்கப்பட்டது