உள்ளடக்கத்துக்குச் செல்

பவல் தீவு

ஆள்கூறுகள்: 60°40′59″S 45°01′59″W / 60.683°S 45.033°W / -60.683; -45.033
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவல் தீவு
Powell Island
தெற்கு ஓர்க்னி தீவுகளின் மத்திய பகுதியில் பவல் தீவின் அமைவிடம்
பவல் தீவு Powell Island is located in Antarctica
பவல் தீவு Powell Island
பவல் தீவு
Powell Island
புவியியல்
அமைவிடம்அந்தாட்டிக்கா
ஆள்கூறுகள்60°40′59″S 45°01′59″W / 60.683°S 45.033°W / -60.683; -45.033
தீவுக்கூட்டம்தெற்கு ஓர்க்னி தீவுகள்
நீளம்13 km (8.1 mi)
அகலம்4 km (2.5 mi)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகைமக்கள் வசிக்காத தீவு

பவல் தீவு (Powell Island) பூமியின் தென்முனையைச் சூழ்ந்திருக்கும் கண்டமான அண்டார்ட்டிக்கா கண்டத்தில் உள்ளது. இத்தீவு 13 கிமீ (8.1 மைல்) நீளமும் 4 கிமீ (2.5 மைல்) அகலமும் கொண்ட ஒரு குறுகிய தீவாகும். அண்டார்ட்டிகாவின் தெற்கு ஓர்க்னி தீவுகளின் மத்திய பகுதியில் உள்ள கொரோனேசன் தீவுக்கும் இலாரி தீவுக்கும் இடையில் பவல் தீவு அமைந்துள்ளது. தீவின் தெற்கு முனையானது, கொரோனேசன் தீவின் தென்மேற்கு முனையிலிருந்து கிழக்கே 7 கிமீ தொலைவில், இலெவ்வெய்ட்டு நீரிணைப்பு மற்றும் வாசிங்டன் நீரிணைப்புகளுக்கு இடையே அமைந்துள்ளது.[1]

வரலாறு

[தொகு]

1821 ஆம் ஆண்டு திசம்பரில் கடற்படைத் தளபதிகள் சியார்ச்சு பவல் மற்றும் நதானியேல் பால்மர் ஆகியோர் கூட்டுப் பயணம் மேற்கொண்டபோது பவல் தீவு கண்டுபிடிக்கப்பட்டது. 1822 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பவலின் வரைபடத்தில் இத்தீவு பெயரிடப்படாவிட்டாலும் சரியாக பட்டியலிடப்பட்டது. 1839 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் நீர்வரைவியல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட கடல்சார் வரைபட அட்டவணையில் பவல் தீவு எனப் பின்னர் பெயரிடப்பட்டது.

பறவைகள்

[தொகு]

தெற்கு பவல் தீவின் ஒரு பகுதியான கொரோனேசன் தீவில் உள்ள இயான் பீக்சின் தெற்கே உள்ள அண்டை நாடுகளான கிறிசுடோபர்சன், பிரெட்ரிக்சன், மைக்கேல்சன் மற்றும் கிரே தீவுகளுடன், வேறு சில பெயரிடப்படாத தீவுகளும் கடலோரத்தில் அமைந்துள்ளன. 2688 எக்டேர் பரப்பளவுள்ள இப்பகுதி ஒரு முக்கியமான பறவைப் பகுதியென அடையாளம் காணப்பட்டுள்ளது. பன்னாட்டுப் பறவைகள் வாழ்க்கை சங்கம் மூலம் பன்னாட்டு பறவை வாழ்க்கை அமைப்பு பல குறிப்பிடத்தக்க கடல் பறவைகள் இனப்பெருக்க குடியேற்றங்களை ஆதரிக்கிறது.[2] பன்னாட்டுப் பறவைகள் வாழ்க்கை சங்கத்தின் எல்லையானது அண்டார்ட்டிக் சிறப்புப் பாதுகாக்கப்பட்ட பகுதியின் 111 எல்லையால் வரையறுக்கப்படுகிறது.[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SCAR Gazetteer: Powell Island". Australian Antarctic Data Centre. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  2. "Important Bird and Biodiversity Areas (IBAs)". Birdlife International. 25 January 2016. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  3. "Southern Powell Island and Adjacent Islands, South Orkney Islands" (PDF). Management Plan for Antarctic Specially Protected Area No. 111: Measure 1, Annex B. Antarctic Treaty Secretariat. 1995. பார்க்கப்பட்ட நாள் 28 September 2013.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பவல்_தீவு&oldid=3801826" இலிருந்து மீள்விக்கப்பட்டது