பழப்பாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழப்பாகு
ஸ்ரோபெரி பழப்பாகு
வகைபரவல் உணவு
முக்கிய சேர்பொருட்கள்பழங்கள் அல்லது மரக்கறிகள்; சீனி, தேன் அல்லது பெக்டின்

பழங்கள் மற்றும் மரக்கறிகளை நீண்டகாலம் பாதுகாத்துப் பிற்பாடு பயன்படுத்துவதற்காக உருவாக்கப்படும் ஒரு உணவுப் பொருளே பழப்பாகு (Fruit preserves) ஆகும். இவ்வுணவுப் பொருள் அடைப்பான்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப் படுகின்றது. இதில் பாகுப் பொருளாக முற்காலத்தில் சீனி அல்லது தேன் பயன்படுத்தப்பட்டாலும், தற்போது இயற்கைப் பெக்டினே பயன்படுத்தப்படுகிறது.

பழப்பாகு தயாரிக்கும் முறை[தொகு]

பழப்பாகானது பழசாற்றில் உள்ள பெக்டின் என்ற சத்துடன், சர்க்கரை, சிட்ரிக் அமிலம் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டிப்டுத்தபட்டது ஆகும்.

பல வகை பழப்பாகு தயாரிக்கும் முறை
 • ஆப்பிள் - 1
 • கொய்யா - 2
 • பப்பாளி பழம் - 1
 • வாழைபழம் - 1
 • ஆரஞ்சு - 1
 • திராட்சை - 1/4 கிலோ
 • சப்போட்டா - 2
 • அன்னாச்சி பழம் - 1
 • சர்க்கரை - 3/4 கிலோ
 • சிட்ரிக் அமிலம் - 1/4 தேக்கரண்டி

செய்முறை[தொகு]

எல்லா பழங்களையும் சேர்த்து கூழாக்கி 1 கிலோ அளவு ஆக்கி கொள்ளவேண்டும். இக்கூழுடன் சர்க்கரை சேர்த்து அளவான தீயில் வேகவிடவேண்டும். பழப்பாகு கெட்டியாகி பதம் வரும் தருவாயில் சிட்ரிக் அமிலம் சேர்த்து கலக்க வேண்டும். பின்பு ஒரு கரண்டியில் பழபாகுவை எடுத்து வழிய விடும்பொழுது பழப்பாகு தாள்போன்று விழந்தால் பழபாகு பதம் வந்துவிட்டது என்று தெரிந்து கொள்ளலாம். பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும். பின்பு கிருமி நீக்கம் செய்யப்பட்ட கண்ணாடிக் குப்பியில் நிரப்பி சேமித்துக் கொள்ளவேண்டும். பழக்கூழ் புளிப்பாக இருந்தால் முக்கால் பங்கு சர்க்கரைக்கு பதிலாக ஒரு பங்கு சர்க்கரை சேர்த்து பழப்பாகு தயாரிக்கவேண்டும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

 1. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தொழிற்கல்வி மேல்நிலை இரண்டாம் ஆண்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழப்பாகு&oldid=2431156" இலிருந்து மீள்விக்கப்பட்டது