பழக்காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"பழக்காடி" என்பது வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ஒரு வளர்ச்சி ஊக்கி ஆகும்.

பழக்காடி செய்யும் முறை[தொகு]

அழுகிய பழங்களை ஒரு மண் கலன் அல்லது பானையில் போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு மோர் அல்லது வடித்த கஞ்சியையோ ஊற்றி மூடி வைக்க வேண்டும். தினமும் இரண்டு முறை மட்டும் நன்றாக கலக்கி விட வேண்டும். பதினைந்து நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு தினம் இரு முறை கலக்கி வந்தபிறகு பழக்காடி தயார் ஆகிவிடும்.

பழக்காடி பயன்படுத்தும் முறை[தொகு]

தயார் செய்யப்பட பழக்காடியை ஒரு லிட்டர் நீரில் முப்பது மி.லி. என்ற விகிதத்தில் கலந்து பயிர்களுக்கு கொடுத்து வந்தால் அது பயிருக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கியாக செயல்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழக்காடி&oldid=2745338" இலிருந்து மீள்விக்கப்பட்டது