பள்ளி ஒழுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1898இல் ஹார்பர்ஸ் வீக்லி அட்டைப்படத்தில் பள்ளி ஒழுக்கம் பற்றிய கேலிச்சித்திரம் காட்டப்பட்டுள்ளது .

பள்ளி ஒழுக்கம் (School discipline) என்பது ஆசிரியர்கள் அல்லது பள்ளி அமைப்புகள், மாணவர்களின் நடத்தை அப்போதைய கல்விச் செயல்பாட்டை சீர்குலைக்கும் போது அல்லது பள்ளி உருவாக்கிய விதியை மீறும் போது எடுக்கும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையது ஆகும். இவை, குழந்தைகளின் நடத்தைக்கு வழிகாட்டலாம் அல்லது தங்களையோ, அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை சிறப்பாகக் கவனித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள உதவும் வரம்புகளை அமைக்க வழிகாட்டலாம். [1]

பள்ளி அமைப்புகள் ஒழுக்கம் தொடர்பான விதிகளை உருவாக்குகின்றன, மேலும் மாணவர்கள் இந்த விதிகளை மீறினால் அது தொடர்பான தண்டனைகளுக்கு ஆளாவார்கள். இந்த விதிகள், பள்ளிச் சீருடை, காலந் தவறாமை, சமூக நடத்தை மற்றும் பணி நெறிமுறை ஆகியவற்றின் எதிர்பார்க்கப்படும் தரங்களை வரையறுக்கலாம். "ஒழுக்கம்" என்ற சொல் விதிகளை மீறுவதால் ஏற்படும் தண்டனைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒழுக்கத்தின் நோக்கம் தீங்கிழைக்கும் அல்லது பள்ளிக் கொள்கைகள், கல்வி நெறிகள், பள்ளி மரபுகள் போன்றவற்றுக்கு எதிராகக் காணப்படும் சில நடத்தைகள் அல்லது மனப்பான்மைகளைக் கட்டுப்படுத்தும் வரம்புகளை அமைப்பதாகும் [2]

ஒழுக்கத்தின் முக்கியத்துவம்[தொகு]

ஒழுக்கம் என்பது மாணவரின் வரம்பு மீறிய செயல்களுக்குத் தீர்வு காண பள்ளி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் செயல்களின் தொகுப்பாகும். ஒழுக்கம் என்பது வகுப்பறை நிர்வாகத்தின் ஒரு பரிமாணம் என்றாலும், வகுப்பறை மேலாண்மை என்பது பொதுவான சொல்லாகும். [3]

பள்ளி மாவட்டங்கள் முழுவதும்[தொகு]

மக்கள்தொகையியல்[தொகு]

அமெரிக்காவிற்குள், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியில் கறுப்பின மாணவர்களின் கல்விக்கு நகர்ப்புறக் கல்வி நிறுவனங்கள் அதிக பங்களிப்பினை வழங்குகின்றன. [4] வெள்ளையர் மாணவர் அமைப்பைக் கொண்ட நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில்,பெரும்பான்மையான கறுப்பின மாணவர் அமைப்பைக் கொண்ட நகர்ப்புற கல்வி நிறுவனங்கள் அதிக ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.[5]

மாற்றுத் திறன் மாணவர்கள்[தொகு]

கறுப்பு மற்றும் வெள்ளை மாணவர்களிடையே தண்டனைக்குரிய ஒழுங்கு நடவடிக்கைகளில் உள்ள ஏற்றத்தாழ்வானது மாற்றுத் திறன் கொண்ட கறுப்பின மாணவர்களுக்கும் விரிவடைகிறது. [6] [7] பள்ளி ஒழுக்கத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்த தேசிய ஆய்வுகள், மாற்றுத் திறன் கொண்ட கறுப்பின மாணவர்கள் அதிக அளவில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளது. [6] [7]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "What is Discipline?". users.metu.edu.tr. Archived from the original on மே 5, 2016. பார்க்கப்பட்ட நாள் May 17, 2016.
  2. "What is Discipline?". users.metu.edu.tr. Archived from the original on மே 5, 2016. பார்க்கப்பட்ட நாள் May 17, 2016.
  3. "What is Discipline?". users.metu.edu.tr. Archived from the original on மே 5, 2016. பார்க்கப்பட்ட நாள் May 7, 2016.
  4. "Number and percentage distribution of public elementary and secondary students, by race/ethnicity and school." National Center for Education Statistics, (2013). https://nces.ed.gov/surveys/ruraled/tables/B.1.b.-1.asp?refer=urban.
  5. Jimenez, Laura, and Antoinette Flores. "3 Ways Devos Has Put Students At Risk by Deregulating Education." Center for American Progress, (July 29, 2019). https://americanprogress.org/article/3-ways-devos-put-students-risk-deregulating-education/.
  6. 6.0 6.1 Lindsey, Constance. "Teacher Race and School Discipline: Are Students Suspended Less Often When They Have a Teacher of the Same Race?" Education Next, (November 1, 2016). https://www.educationnext.org/teacher-race-and-school-discipline-suspensions-research/.
  7. 7.0 7.1 Losen, Daniel J. "Disabling Punishment: The Need for Remedies to the Disparate Loss of Instruction Experienced by Black Students with Disabilities." The Center for Civil Rights Remedies at The Civil Rights Project, (April 2018).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளி_ஒழுக்கம்&oldid=3529024" இலிருந்து மீள்விக்கப்பட்டது